இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஏஞ்சலோ மெத்தியூஸ் கொவிட் -19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஏஞ்சலோ மெத்தியூஸ் விளையாடிய நிலையில் தற்போது அவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில், மெத்தியூஸ் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளதுடன், அவருக்கு பதிலாக ஓஷத பெர்னாண்டோ களமிறங்குவார் என தெரிவித்துள்ளது.