எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலாவிடிய தோட்டத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டுத்தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொஹமட் தவாஹிர் அப்துர் ரஹ்மான் என்பவரின் வீட்டின் மீது இன்று அதிகாலை இந்த பெற்றோல் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த தாக்குதலில் வீட்டிலிருப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது பெற்றோல் குண்டுத் தாக்குதல் என சந்தேகிப்பதாகவும் தாக்குதல் தனிப்பட்ட காரணங்களுக்காகவா அல்லது வேறு காரணங்களா என்பது தொடர்பில் ஆரய்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

