தமக்கு எந்தவொரு தரப்பினருடனும் இரகசியமாகவோ பகிரங்கமாகவோ இரகசிய உடன்படிக்கைகள் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது சுதந்திரமான யாழ்ப்பாணம் உள்ளது. இந்த சுதந்திரத்தை பாதுகாத்து அபிவிருத்தியை நோக்கி செல்வது தொடர்பில் சிந்திக்க வேண்டும்
அதிகமான காணிகள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்கள் தொடர்பில் தேடப்படுகின்றன. யுத்தத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பிலும் கரிசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக சிறையிலிருப்பவர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நாட்டின் அரசியல் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நாம் கலந்துரையாடி வருகிறோம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
வடக்கும் தெற்கும் ஏற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தை தாம் முன்வைத்துள்ளதாகவும் வடக்கின் அரசியல் காட்சிகள் இதை ஏற்று தம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)
மேலும் எமது ஜனாதிபதி தெரிவு செய்யப்பதன் பின்னர் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்காக தமக்கு ஆதரவு வழங்குமாறும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

