எல்லைப் பகுதியில் பதற்றம் நீடிக்கும் நிலையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என இந்திய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், பின்லேன்ட் விவகாரத்தில் அமெரிக்கா எவ்வாறு தொழிற்பட்டதோ அது போன்ற நடவடிக்கைக்கு இந்தியாவும் தயார் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவின் எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகின்ற நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி விமானப்படைத் தளபதியுடன் அவசர சந்திப்பில் ஈடுப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில் 40 இற்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், இதனையடுத்து இந்தியா, பாகிஸ்தானிற்கு இடையே பரஸ்பர தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.