Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எல்லா வயதினருக்கும் – ஒரே ஸ்டைலில் வரும் நைட்டி!!

July 23, 2017
in News
0

தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் பெண்களின் பகல் உடையாக மாறிப் போயிருக்கிறது ‘நைட்டி’. எல்லா வயதுக்கும் ஒரே ஸ்டைல். தாய்மை காலத்தில் பயன்படுத்தும் நைட்டியில் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு. பல ஆண்டுகளாக ஒரே ஸ்டைலில் வரும் நைட்டியின் மீது அடங்காத வெறுப்பில் இருக்கும் பெண்கள் அனேகம்பேர்.

சிக்கென்ற உடல்வாகு உள்ள இளம் பெண்கள், நைட்டியின் மீது இருக்கும் கடுப்பால், பனியன் கிளாத்தில் வரும் நைட் சூட்டுக்கு மாறி விட்டனர். அது நைட்டி போல் இல்லை.

கொஞ்சம் விலை கூடுதல். ‘நைட் சூட்’ எல்லோருக்கும் ஏற்ற விலையில் இல்லை. காட்டன் பீல்… அதே சமயம் கொஞ்சம் ஸ்டைலா நைட்டி கிடைக்காதா என்ற தமிழ்நாட்டுப் பெண்களின் புலம்பல் திருப்பூர் நிப்டி நிட் வேர் பேஷன் இன்ஸ்டியூட் மாணவிகள் காதில் விழ..இதோ டிரெண்டி நைட்டிகளை உருவாக்கி பேஷன் உலகத்தை பரபரப்பாக்க இருக்கிறார்கள்

எம்.பி.ஏ. இன் அப்பாரல் பிசினஸ் முதலாம் ஆண்டு மாணவிகளின் பியூஷன் இது. சில நாட்கள் பேஷன் ஆகப் போகிறது.

அனுப்பிரியா, சந்தியா, வாசுகி, தனுஸ்ரீ, கீர்த்தனா, வைஷ்ணவி ஆகிய ஆறு பேரும் விடியவிடிய விழித்திருந்து கண்டறிந்த டிசைன்கள்தாம் இவை. டிசைனிங், கட்டிங், ஸ்டிச்சிங் என அனைத்திலும் களம் இறங்கி கலக்கியுள்ளனர்.

இவர்களது டிரெண்டி நைட்டிகளுக்கு உயிர்கொடுத்த மாடல்களை உற்சாகமாக கிளிக்கி, உங்கள் பார்வைக்கு ஆச்சர்யமாக்கு வித்தையைக் கொடுத்தது காஸ்ட்யூம் டிசைனிங்கில் முதலாம் ஆண்டு படிக்கும் சௌமியா.

நைட்டியோட ஸ்டைலையே மாத்திட்டீங்களே எப்படி ?

”நைட்டிய வெறுக்க பொதுவா என்னென்ன காரணங்கள்னு பெண்களோட மனக்கதவுகளைத் தட்டினோம். அங்கிருந்து வந்திருந்த மனக்குமுறல்கள்தான் டிசைன்களாக உருவெடுத்தது.

”தோள் முதல் கால் வரை ஒரே மாதிரியான பீல். குனிந்து, நிமிர்ந்து வேலை பார்க்க முடியலை. திடீர்னு வீட்டுக்கு விருந்தினர் வந்துட்டா ஷாலையோ, டவலையோ தேடி ஓட வேண்டியிருக்கு.

அப்போதைக்கு தப்பிச்சாலும், அசெளகரியமா இருக்கு. காட்டன் நைட்டி டிரான்ஸ்பெரன்டா இருக்கிறதும் ஒரு மாதிரி பீல் தருது. விடுமுறை நாட்கள்ல வீட்டு வேலைகளுக்கு இடையில டக்குனு எங்காவது கிளம்பனும்னா மறுபடியும் டிரஸ் பண்ற அவஸ்தை இருக்கே அச்சச்சோ கொடுமை. வீட்டில் இருக்கும் போது நைட்டிதான் பெட்டர். இத்தனை சங்கடங்களோட நைட்டிய சகிச்சுக்க வேண்டியிருந்தது”

இது மாதிரியான கருத்துகள்தான் எங்களை புது வித நைட்டியா வந்திருக்கு”

நைட்டி

நியூ ஸ்டைல் நைட்டியில என்னென்ன ஸ்பெஷல்?

* போரடிக்கும் ஸ்டைல மாற்ற நைட்டிக்கான பேப்ரிக்கே புதுசு. காட்டன் கசங்கும், சுருங்கும், நாள்ப்பட கலர் மங்கும். இதெல்லாம் டெனிம்ல இல்ல எப்பவும் பெண்களை ஃப்ரெஷ்ஷா காட்டும்.

* டெனிம்னாலே ஜீன்ஸ் போல ஹார்டா இருக்கும்ன்ற எண்ணமே வேண்டாம். இது மெல்லிய டெனிம் கிளாத். ரொம்ப சாப்ட், வெயிட்லெஸ்ஸாவும் இருக்கும். போட்டுக்கிட்டா உடலோட சினேகமாயிடும்.

* கழுத்து , கை, பாட்டம்னு லேஸ் வைத்து, மேச் பண்ணியதில் டிசைனும் புதுசு. இந்த நைட்டிய போட்டுகிட்டா யூத்தா ஃபீல் பண்ணலாம்.

டெனிம்ல பிளெயினோட, பிரின்டட் கிளாத் ரொம்பவே அழகுக்கு அழகு சேர்க்குது. வெரைட்டியா நைட்டி போட்டு அசத்தலாம்.

* கசங்காது, சுருங்காது, டிரான்ஸ்பரன்டா இருக்காது வழக்கமான நைட்டியில் இருக்கும் சங்கடங்கள் இதில் இருக்கவே இருக்காது.

* உட்கார்ந்து, எழுந்து எந்த வேலையும் செய்யலாம். டெனிம் கிளாத், எதற்கும் வளைந்து கொடுக்கும். பரபர வேலைக்கு இடையில் டென்சன் இல்லாமல் இயங்கலாம்.

* சண்டே சமையலுக்கு இடையில் டக்குன்னு வெளிய கிளம்பனுமா? வேற என்ன டிரெஸ் பண்றதுன்னு யோசிக்கவே தேவையில்லை. டிராவல், டிரைவிங் எல்லா நிலையிலும் இந்த நைட்டி ரொம்ப கம்போர்டா இருக்கும். பார்க்கும் பலரையும் பொறாமைப்பட வைக்கும்.

* நியூ ஸ்டைல் நைட்டியை அயர்ன் செய்தும் போடலாம். துவைத்த பின் விரைவில் உலர்ந்து விடும். பராமரிப்பதும் ரொம்ப எளிது.

* பெண்கள் தங்களோட உடல் வாகுக்கு ஏற்ப ஃபிட்டாக தைத்துக் கொள்ளலாம். கொஞ்சம் குண்டாக இருப்பவர்களையும் ஒல்லியாகக் காட்டும் உபயம் இதில் உண்டு.

* வீட்டுக்கு விருந்தினர் வந்தால் இனி ஷாலையோ, டவலையோ தேடி ஓட வேண்டியதில்லை. உங்கள் ஸ்டைலையே மாற்றப் போகும் நைட்டி இது.

* வெஸ்டர்ன் ஸ்டைல் எல்லாம் இதில் சாத்தியம். நைட்டியை ஷார்ட்டாக தைத்து, லெகினுடன் மேட்ச் செய்யலாம். வரும் காலத்தில் டிரெண்டி பெண்களின் சாய்ஸ் இதுவாகத்தான் இருக்கும் என்று சொல்லும் அவர்களின் டிசைன் நிச்சயம் சொல்ல வைக்கிறது வாவ்.

Previous Post

மருத்துவக் குணங்கள் நிறைந்த முருங்கை

Next Post

திருமணத் தடை நீக்கும் ஹோமம்

Next Post
திருமணத் தடை நீக்கும் ஹோமம்

திருமணத் தடை நீக்கும் ஹோமம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures