எரிபொருள் விலை உலக சந்தையில் அதிகரிப்பது மற்றும் குறைவது என்பன தொடர்பில் கண்டறிவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இக்குழு வழங்கும் தீர்மானத்துக்கு ஏற்ப, விலைச் சூத்திரத்தை செயற்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை குறைந்தவுடன் அதன் நன்மையை பொது மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

