இன்று (21) மற்றும் நாளை (22) சேமிப்பு முனையங்களிலிருந்து எரிபொருள் வழங்கப்படாது என்று கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமரா, நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு தொடர்ச்சியாக எரிபொருள் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒற்றை/இரட்டை முறை
மேலும், வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கம் இரட்டை எண்ணாக உள்ள வாகனங்களுக்கு மட்டுமே நேற்று (20) எரிபொருள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கியூஆர் குறியீடு மற்றும் ஒற்றை/இரட்டை முறைப்படி எரிபொருள் வழங்குவதன் மூலம், நெரிசல் குறைக்கப்பட்டு, அனைவரும் மிகவும் வசதியாக எரிபொருளைப் பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
