Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எரிபொருள் பெரல் ஒன்றின் மூலம் 20 டொலர் மோசடி | விசாரணை நடத்துமாறு சம்பிக்க கோரிக்கை

August 20, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ராஜபக்ஷ குடும்பத்தின் ஆதிக்கம் அற்ற பயணத்தை டலஸ் ஆரம்பித்துள்ளமை ஜனநாயகத்திற்கு சிறந்த அறிகுறி

நாட்டுக்கு எரிபொருள் கொண்டுவருவதில் மிறீமியம் ஊடாக 2022ஆம் ஆண்டில் இதுவரை 6அமெரிக்க டொலர் மில்லியன் மோசடி இடம்பெற்றுள்ளதுடன் ஒரு பெரல் எண்ணெய் மூலம் ஏற்படும் 20 டொலர் மோசடிக்கு அமைச்சர் கஞ்சன விஜேசேகர தொடர்பு இல்லை என்றால் கணக்காய்வாளர் நாயகம் மூலம் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பொரலஸ்கமுவயில் அமைந்துள்ள 43 ஆவது படையணியில் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இந்த மோசடியை வெளிப்படுத்தினார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பிறீமியம் ஊடாக நாட்டுக்கு எரிபொருள் கொண்டுவருவதன் மூலம் இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்றுள்ள மோசடி தொடர்பாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர இரகசிய பொலிஸில் முறைப்பாடு செய்திருப்பது ஊடகங்களில் வெளிப்பட்டிருந்தது.

அதேபோன்று இதனை வெளிப்படுத்தியவர்கள் தொடர்பாகவும் தேடிப்பார்த்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர இரகசிய பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்திருப்பது, இந்த மோசடி நடவடிக்கையை வெளிப்படுத்திய நபர்களை இங்கு கொண்டுவந்து அவர்களை பயமுறுத்தவா என்ற சந்தேகம் எழுகின்றது.

அத்துடன் இரகசிய பொலிஸ் உண்மையில் கோத்தாபய ராபக்ஷ்வின் கீழ் செயற்பட்டது. நாட்டில் சட்டத்தை நிலைநாட்டும் நிலையமாக அல்ல.

தற்போது அது தொடர்ந்து புதிய பொலிஸ் அமைச்சரும் இந்த அரசாங்கத்தின் கீழ் செயற்படுவதை, அந்த இடத்துக்கு கொண்டுசெல்லும் நபர்களை பார்க்கும்போது தெளிவாகின்றது. அதனால் இரகசிய பொலிஸாரால் இந்த மோசடிக்கு உண்மையான விசாரணை இடம்பெறுமா என்பதை நம்ப முடியாது.

அத்துடன் தொழிநுட்ப நடவடிக்கை தொடர்பான அறிவு இரகசிய பொலிஸாருக்கு இல்லை. அதனால் அந்த மோசடிக்கு எரிசக்தி அமைச்சர் சம்பந்தம் இல்லை என்றால், இந்த நாட்டில் கணக்காய்வாளர் நாயகம் ஒருவர் இருக்கின்றார்.

அவருக்கு இதுதொடர்பாக விசேடத்துவ தெளிவை வழங்கி, அதுதொடர்பில் விசேடத்துவ அறிவுள்ள பிரிவினரை அவருக்கு வழங்கி், தேவையான நபர்கள் யார் என்பதை முறையான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு கேட்கின்றோம்.

அதனால் இந்த மோசடிக்கு உண்மையான தீர்வை பெற்றுக்கொள்ள இதற்காக பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் விசேட ஒத்துழைப்பு வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் எரிசக்தி அமைச்சரி்டமும் கேட்டுக்கொள்கின்றோம்.

பிறீமியம் என்றால் போக்குரவத்து கட்டணம், காப்புறுதி கட்டணம், அதேபோன்று பிரதான விநியோகத்தரின் லாபம் அதேபோன்று உள்நாட்டு முகவரின் லாபமாகும்.

இந்த அனைவரதும் கூட்டுத்தொகைதான் அடிப்படை செலவுக்கு மேலதிகமாக எண்ணெய் பெரல் ஒன்றுக்கு பிறீமியம் என தெரிவிக்கின்றோம்.

அதன் பிரகாரம் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றில் இருந்து 2022 பெப்ரவரி மாதம் 18,19 ஆகிய திகதிகளில் கொண்டுவரப்பட்ட பெற்றோல் 92வகை மற்றும் 95 வகைக்காக பெரல் ஒன்றுக்கு பிறீமியம் 3.87டொலர் அறவிடப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று 2022 பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஒரு பெரல் டீசல் 3.4 மற்றும் 4.1 டொலருக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

ஆனால் இவ்வாறு சென்று கடந்த மாதம் 14,15ஆம் திகதிகளில் கொரல் எனர்ஜி நிறுவனம், பெரல் ஒன்றுக்கு பிறீமியம் 25 டொலருக்கு டீசல் கொண்டுவந்திருக்கின்றது.

முன்னர் 3, 4டொலருக்கு கொண்டுவரப்பட்டது தற்போது 25 டாெலருக்கு கொண்டுவந்திருக்கின்றது. அதேநேரம் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் இந்த டீசலை 21.6 டொருக்கு கொண்டுவந்திருக்கின்றது.

இவ்வாறு அண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் சுமார் 3இலட்சம் பெரல் எண்ணெய் கொண்டுவந்திருக்கின்றது. அதனால் பிறீமியரில் மாத்திரம் 20டொலர் வரை அதிகரிப்பு. இதன் மூலம் 6மில்லியன் டொலர்வரை மேலதிக லாபம் பெறப்பட்டிருக்கின்றது.

எனவே நாடு இந்தளவு பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவதற்கு பிரதான நிறுவனம் தான் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம். அதனால் இந்த மோசடி தொடர்பாக கணக்காய்வாளர் நாயகம் ஊடாக உரிய விசாரணை நடத்தி, இதன் அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவேண்டும் என அரசாங்கத்தை கேட்கின்றோம் என்றார்.

Previous Post

ஜனாதிபதி ரணில் ஜப்பானுக்கு விஜயம்

Next Post

உலகின் உயரமான ரயில் பாலம் ஜம்மு காஷ்மீரில் திறப்பு

Next Post
உலகின் உயரமான ரயில் பாலம்  ஜம்மு காஷ்மீரில் திறப்பு

உலகின் உயரமான ரயில் பாலம் ஜம்மு காஷ்மீரில் திறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures