இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணல் குறித்து மகிந்த அணி உறுப்பினர் ஒருவர் பதில் அளிக்க மறுத்துள்ளார்.
குறித்த விடயம் மகிந்த அணியின் உறுப்பினரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிசிடம் கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியிருந்தது.
எனினும், அவர் கருத்து வெளியிட மறுத்துள்ளார். இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு நீண்ட செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார்.
அதில், விடுதலைப் புலிகளுடனான முதல் சந்திப்பு, புலிகளின் தலைவர் பிரபாகரனின் குணவியல்புகள், பாலச்சந்திரனின் படுகொலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில, எரிக் சொல்ஹெய்ம் வழங்கிய செவ்வி தொடர்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிசிடம் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அவர் பதில் எதுவும் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது

