பெரு நாட்டில் உள்ள உபினாஸ் எரிமலை, எரிகுழம்புகளை வெளியேற்றி வருவதால், முன்னெச்சரிக்கையாக மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
உபினாஸ் மலை கடந்த ஒரு வார காலமாக எரிகுழம்புகள் மற்றும் சாம்பலை வெளியேற்றி வருகிறது. இதனால் வானில் கரும் புகை கலந்து, மலையின் அருகே, வெப்பத்தின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது.
மக்கள், சுவாசம் தொடர்பான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கையாக மாஸ்க், கண்களை பாதுகாத்துக்கொள்ள காகில்ஸும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த எரிமலையானது தொடர்ந்து சில மாதங்கள் உயிர்ப்புடன் இருக்கும் என்பதை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து எச்சரித்துள்ளனர்.
இதனால் எரிமலை அருகே வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டு, அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.