வீதியோரமாக உறங்கிக் கொண்டிருந்தவரை எரிபொருள் ஏற்றிச் சென்ற வாகனம் மோதியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்து நீர்கொ ழும்பு கொச்சிக்கடைப் பகுதியில் நேற்று அதிகாலை 4-.30 மணியளவில் நடந்தது. விபத்தில் 50 வயதுடைய நபர் உயிரிழந்தார்.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளைக் கொச்சிக்கடைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.