எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி., கிருமியை 30 பெண்களிடம் பரப்பிய நபருக்கு இத்தாலியில் 24 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இத்தாலியை சேர்ந்தவர் வாலெண்டினோ டலுடோ, 33, கடந்த 2006-ல் எச்.ஐ.வி., தொற்று இருப்பதை அறிந்து கொண்டார்.
இதன் பின்னரும் 53 பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டார். ஹார்ட் ஸ்டைல் என்ற பெயரை பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களை வலையில் வீழ்த்தினார். டலுடோவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
‘டலுடோவின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டதல்ல’ என வழக்கறிஞர் வாதாடினார். ஆனால், இதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. குற்றம் நிரூபிக்கபட்டதால் 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.