எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க போய் கொரோனா வைரஸ் கசிந்து இருக்கலாம் என்று நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் மருத்துவர் லுக் மோன்டேக்னியர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுக்க மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக உலகம் முழுக்க 2,407,562 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 165,082 பேர் உலகம் முழுக்க பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் சீனாவில் இருக்கும் வுஹன் வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் இருந்து கசிந்து இருக்கலாம் பல்வேறு நாடுகள், ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் எழுப்ப தொடங்கி உள்ளனர். அமெரிக்காவும் இது தொடர்பாக விசாரிக்க உள்ளது.
கொரோனா வைரஸ் என்பது பயோ ஆயுதமாக கண்டிப்பாக உருவாக்கப்பட்டு இருக்காது என்று பல நாடுகள் தெரிவிக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் வுஹன் வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் இருந்து கசிந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
1990 களில் இருந்து வுஹன் ஆராய்ச்சி மையம் பல்வேறு வைரஸ் ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. அங்கு வைரஸ் தொடர்பாகவும் அதற்கு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பாகவும் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.
அதேபோல் வௌவால்களிலும் அங்கு ஆராய்ச்சி செய்யப்படுகிறது. வௌவால்களில் காணப்படும் கொரோனா குடும்பத்தின் வைரஸ்களை ஆராய்ச்சி செய்து வருகிறது.
வுஹனில் இருக்கும் மத்திய வைரலாஜி ஆராய்ச்சி மையத்தில் கடந்த 2000ம் வருடத்தில் இருந்தே கொரோனா தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இங்கு இருக்கும் பி4 என்ற சோதனை கூடத்தில்தான் கொரோனா தொடர்பான ஆராய்ச்சிகள் நடக்கிறது
இங்குதான் மிக கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து வைரஸ் கிருமிகள் லீக்காவது மிகவும் கடினமான விஷயம் ஆகும்.
இந்த நிலையில் இங்கிருந்து ஆராய்ச்சியாளர் ஒருவர் மூலம் கொரோனா வைரஸ் வெளியேறி இருக்கலாம்.
கவனக்குறைவு காரணமாக இந்த வைரஸ் கசிந்து இருக்கலாம். இந்த வைரஸ் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர்தான் கொரோனா மூலம் தாக்கப்பட்ட முதல் நபர் என்ற தியரி தற்போது உலவி வருகிறது.
இந்த நிலையில்தான் உலகம் முழுக்க பிரபலமான வைரலாஜி ஆராய்ச்சியாளர் மற்றும் நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் மருத்துவர் லுக் மோன்டேக்னியர், இந்த வைரஸின் தோற்றம் குறித்து கூடுதல் தகவல்களை அவர் வெளியிட்டார்.
2008ம் ஆண்டு முதல் முதலில் எய்ட்ஸ் நோயை உருவாக்கிய எச்ஐவியை கண்டுபிடித்தது இவர்தான். இதை கண்டுபிடித்ததற்காக 2008ல் அவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து அவர் அளித்து இருக்கும் பேட்டியில், எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க போய் அதன் மூலம் இந்த கொரோனா வைரஸ் உருவாகி இருக்கலாம். எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று, கொரோனா, மலேரியா வைரஸ்களை வைத்து ஆராய்ச்சி செய்துள்ளனர். அதன்மூலம் இந்த புதிய கொரோனா வைரஸ் உருவாகி இருக்கலாம்.
அந்த சோதனை கூடத்தில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் மூலம் புதிய கொரோனா வைரஸ் வெளியேறி இருக்கலாம். இந்த புதிய கொரோனா வைரஸில் எச்ஐவி வைரஸ்கள் மற்றும் மலேரியா வைரஸ்களின் ஜீன்கள் இருக்கிறது. அதனால் இதை முழுமையாக சோதனை செய்ய வேண்டும் என்று புதிய கொரோனா வைரஸ். இது எப்படி வெளியானது என்று விசாரிக்க வேண்டும், இல்லையென்றால் இந்த ஆபத்து தொடரும் என்று லுக் மோன்டேக்னியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவரின் இந்த புதிய சந்தேகம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

