அமெரிக்காவுடனான எம்.சி.சி. ஒப்பந்தத்தை முன்பு மோசமானது என விமர்சித்தவர்கள் தற்போது அதனை ஆராய்வதற்கு குழு நியமித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் குற்றம்சாட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எம்.சி.சி.ஒப்பந்தம் தொடர்பில் கேள்வி எழுப்பினார். இது குறித்து சபையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதன்போதே எஸ்.எம்.மரிக்கார் எம்.பி. இதனைக் கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டில் 60 லட்சம் மக்கள் அந்த ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். அவர்களின் ஆணையை மீறி அந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படக் கூடாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

