செவ்வாய்க்கிழமை, கலே செல்ல இருக்கும் ஜனாதிபதி எமானுவல் மக்ரோனை நாங்கள் சந்திக்க மாட்டோம் என, அகதிகளிற்கு உதவி புரியும் இரண்டு தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
L’Auberge des migrants, Utopia 56 ஆகியதொண்டு நிறுவனங்களும், ஜனாதிபதியுடனான சந்திப்பானது அவிசியமற்றதும் பயனற்றதும் எனத் தெரிவித்துள்ளனர். ‘ஏற்கனவே மனுவல் வால்ஸ், பேர்னார் காசநெவவ், ஜெரார் கொலோம்ப் ஆகியவர்களைச் சந்தித்தும் அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் அகதிகளின் நலனிற்காக எடுக்கவில்லை. இதனால் நாங்கள் வீணாக எமானுவல் மக்ரோனையும் சந்திக்க விரும்பவில்லை’ எனத் தெரிவித்துள்ளனர்.
‘இன்று கலேயின் அகதிகளின் நிலைமை இவ்வளவு மோசமானதற்குக் காரணம், அரசியலே’ என இந்த இரண்டு தொண்டு நிறுவனங்களும் ஒரே குரலில் தெரிவித்துள்ளன.
குளிரில் உறங்குவதற்காக வழங்கப்பட்ட உறங்கும் பைகளையும், அவர்களது கூடாரங்களையும் அடிக்கடி பலர் சேதமாக்கிவிட்டுச் செல்வதாகத் தாங்கள் பல முறை முறைப்பாடுகள் வழங்கியும், எந்த நடவடிக்கையும் இதுவரை அரசோ அல்லது காவற்துறையோ எடுக்கவில்லை எனவும், இந்தத் தொண்டு நிறுவனங்களும் Secours catholiqueம் கண்டணத்துடன் தெரிவித்துள்ளன.