Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

எப்படி இருக்கிறது ‘தி லெஜண்ட்’ | திரைவிமர்சனம்

July 30, 2022
in Cinema, News
0
எப்படி இருக்கிறது ‘தி லெஜண்ட்’ |  திரைவிமர்சனம்

நோயை குணப்படுத்தும் எளிய மனிதரின் வாழ்க்கை குறித்த படம்விமர்சனம்

தி லெஜண்ட்

விஞ்ஞானியாக இருக்கும் சரவணன், பல சாதனைகளை செய்து உலகநாடுகளை அசரவைக்கிறார். அதன்பின், தனது சொந்த ஊருக்கு சென்று தன்னுடைய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். தனது தாத்தா உருவாக்கிய கல்லூரியை எடுத்து நடத்தும் சரவணன், ஊரில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நினைக்கிறார்.

This image has an empty alt attribute; its file name is 1737334-8.jpg

இந்நிலையில் சரவணனின் நண்பரான ரோபோ சங்கர், சர்க்கரை நோயால் இறந்து விடுகிறார். இதனால் வருந்தும் சரவணன், சக்கரை நோயை குணப்படுத்தும் மாற்று வழியை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார். இதற்கு பல தடைகளும் இன்னல்களும் சரவணனுக்கு வருகிறது.

இறுதியில் சரவணனுக்கு வந்த பிரச்சனை என்ன? பிரச்சனைகளை கடந்து சர்க்கரை நோய்க்கு மாற்று மருந்தை சரவணன் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

This image has an empty alt attribute; its file name is 1737339-7.jpg

அறிமுக படத்திலேயே மக்களை கவரும் வண்ணம் நடித்துள்ளார் சரவணன். ஆக்ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட் என அனைத்திலும் தனது முயற்சியை நூறு சதவீதம் கொடுத்துள்ளார். குறிப்பாக ஆக்ஷன் காட்சியில் மாஸ் காண்பித்துள்ளார். நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் விவேக்.

This image has an empty alt attribute; its file name is 1737340-9.jpg

சரவணனுக்கு மனைவியாக நடித்து இருக்கும், கீத்திகா திவாரி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். அழகான வில்லியாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார் ஊர்வசி. வழக்கமான வில்லத்தனத்தை கொடுத்து இருக்கிறார் சுமன். ரோபோ சங்கர் மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.

This image has an empty alt attribute; its file name is 1737343-10.jpg

சரவணனின் அண்ணனாக வரும் நடிகர் பிரபு, தந்தையாக வரும் விஜயகுமார், விஞ்ஞானி நாசர் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார் யோகி பாபு.

This image has an empty alt attribute; its file name is 1737352-12.jpg

மெடிக்கல் மாஃபியாவை படத்தை இயக்கியிருக்கிறார்கள் இயக்குனர்கள் ஜேடி – ஜெரி. மெடிக்கல் மாஃபியா கதையை வைத்து பல படங்கள் வெளியாகி இருந்தாலும், இப்படம் அதிலும் தனித்துவமாக  அமைத்திருக்கிறார்கள். விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை, கலர்ஃபுல்லான பாடல்கள் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

This image has an empty alt attribute; its file name is 1737353-11.jpg

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் மனதை தொடுகிறது. பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். வேல்ராஜின் ஒளிப்பதிவு மற்றும் அனல் அரசின் சண்டை படத்திற்கு பலம்..

மொத்தத்தில் ‘தி லெஜண்ட்’ கிரேட்.

Previous Post

இலங்கைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய உலக வங்கியின் எச்சரிக்கை

Next Post

இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியால் மட்டுமே விடுதலை புலிகளை இலங்கை இராணுவத்தால் வெற்றி பெற முடிந்தது | வைகோ

Next Post
இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியால் மட்டுமே விடுதலை புலிகளை இலங்கை இராணுவத்தால் வெற்றி பெற முடிந்தது | வைகோ

இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியால் மட்டுமே விடுதலை புலிகளை இலங்கை இராணுவத்தால் வெற்றி பெற முடிந்தது | வைகோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures