2 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் திமுக பொதுக்குழுவில் கோபமாக பேசி இருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இதில் ஆலோசித்தனர். உள்ளாட்சி தேர்தல் குறித்து இதில் முக்கிய விவாதங்கள் செய்யப்பட்டது.
திமுகவின் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சில எம்பிக்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதேபோல் நாளையே திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்க உள்ளது.
தமிழகம் முழுக்க இருக்கும் திமுக மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதி இரண்டுமே திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் கோட்டை.
ஆனால் அதில் திமுக கூட்டணி தோல்வியை தழுவியதை ஸ்டாலினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் இதை பற்றி கோபமாக பேசி இருக்கிறார்.
ஸ்டாலின் தனது பேச்சில், திமுக தலைவராக இருந்த கருணாநிதி போல நான் எழுதுவது கிடையாது. அவரை போல மிக சிறப்பாக என்னால் பேச முடியாது. ஆனால் எதையும் நான் கற்றுக்கொள்வேன். அனைத்தையும் என்னால் சமாளிக்க முடியும். நான் கட்சிக்காக தீவிரமாக உழைத்து வருவது உங்களுக்கு தெரியும்.

