சூர்யா, விஜய் ரசிகர்கள், என்னை போனில் மிரட்டுகின்றனர்; எனக்கு ஏதாவது நேர்ந்தால், சூர்யா தான் பொறுப்பு’ என, நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் கூறியுள்ளார்.
தன்னை தானே சூப்பர் மாடல் என கூறிக் கொள்ளும் நடிகை மீரா மிதுன் தொடர்ந்து நடிகர்கள் பலரையும் விமர்சித்து வருகிறார். ‘ஹிந்தி பட உலகை போல, தமிழ் திரையுலகிலும் வாரிசு அரசியல் உள்ளது. சில கும்பல்களின் செயல்களால், பலருக்கு பட வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன’ என, நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் டுவிட்டரில் புகார் கூறி வருகிறார்.
சமீபத்தில் ரஜினி, திரிஷா, தனுஷ், விஜய் குறித்தும் இவர் பேசியிருந்தார். இந்நிலையில் சூர்யா குறித்து ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் அவருக்கு நடிக்கவே தெரியாது. ஒரு சாதாரண காட்சிக்கு கூட 20 டேக்கு வாங்குவார். ஆக்டிங்கிற்கு என்ன ஸ்பெல்லிங் என கேட்பவர் சூர்யா என விமர்சித்து இருந்தார் மீரா.
இந்நிலையில் சூர்யா, விஜய் ரசிகர்கள், தன்னை தொடர்ந்து, போனில் மிரட்டி வருவதாக கூறியுள்ளார். டுவிட்டரில் மீரா மிதுன் கூறியுள்ளதாவது: சூர்யா, விஜய் ரசிகர்களிடம் இருந்து, மோசமான செய்திகள், மொபைல் அழைப்புகள், கற்பழிப்பு மற்றும் மரண அச்சுறுத்தல்கள் வருகின்றன. உங்கள் மனைவியருக்கும், குழந்தைகளுக்கும் இதுபோல் நடந்தால் ஏற்பீர்களா…; 80க்கும் மேற்பட்ட எண்களில் இருந்து மிரட்டல்கள் வருகின்றன. என் மொபைல் போன் எண்ணை, பல்வேறு குழுக்களுக்கு பரவ விட்டுள்ளனர். எனக்கு ஏதாவது நடந்தால், சூர்யா தான் பொறுப்பாவார். உறுதியற்ற நிலைக்கு என்னை துாண்டுகின்றனர். நிச்சயமாக இதற்கு பதிலளிப்பீர்கள் என, நம்புகிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.