நாடு முழுவதிலும் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்குடன் நிதி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா என்ற வேலைத்திட்டத்தின் இரண்டாவது கண்காட்சி இன்று காலை அநுராதபுரம் வலிசங்க விளையாட்டு மைதானத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
11 வலயங்களின் கீழ் ஜுலை மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரையில் காலை 10 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணி வரையில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் அரச மற்றும் தனியார் துறைகளை சேர்ந்த சுமார் 500 கண்காட்சி கூடங்கள் இடம்பெற்றுள்ளன.
இலங்கையில் 10 இலட்சம் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் இலக்கை கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அநுராதபுரம் மாவட்டத்தில் 20 ஆயிரம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பம் தொடக்கம் இது வரையில் 88,152.2 மில்லியன் ரூபா பெறுமதியான கடன் வழங்கப்பட்டதுடன் இதில் 55,680 மில்லியன் ரூபா கடனுதவி தொழில் துறைகளுக்காக வழங்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.
கடந்த வருடத்தில் மாத்திரம் 39,000 பேருக்கு திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த வருடத்தில் இதனை மேலும் விரிவுப்படுத்தி மேலும் பலருக்கு கடன் உதவி வங்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
இதற்காக 6 100 மில்லியன் ரூபா கடனாக பெற்று கொகள்பவருக்கான வட்டியை திறைச்சேரி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த வருடத்தில் வட்டியை செலுத்துவதற்காக 5000 மில்லியன் ரூபாவை திறைச்சேரி ஒதுக்கியுள்ளது.
இந்த அனைத்து கடனுதவிகளும் எந்தவித அரசியல் பேதங்களுக்கு அப்பால் அரச மற்றும் தனியார் வங்கிகளின் மூலம் வட்டி நிவாரணத்தில் வழங்கபடவுள்ளமை விஷேட அம்சமாகும். அநுராதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கும் தொழில் துறையினருக்கும் தேவையான அறிவு, புரிந்துணர்வு வழிகாட்டிகள் மற்றும் நிதி வசதிகளை இந்த கண்காட்சி திடலில் பெற்றக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலமாக பயன்களை பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.