எனக்கு பூமாலை தேவையில்லை, கிழிந்த வலையில் மாலை போடுங்கள், அதோடு நாடாளுமன்றம் சென்று உங்களின் பிரச்சனையை உலகம் அறியச்செய்து தீர்த்து வைக்கிறேன் என ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்மாவட்ட வேட்பாளர் வி .சகாதேவன் தெரிவித்துள்ளார்.
மீனவர்களின் துன்ப நிலையை எடுத்துக்காட்டும் விதமாக வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கடல்தொழில் சங்க கடல்தொழிலார்களுடன் கலந்துரையாடி அவர்களின் துன்பங்களுக்கு தீர்வு கண்டு தருவதாக உத்தரவாதம் வழங்கியுள்ளார்.
அவர்கள் தன்னில் நம்பிக்கை வைப்பதாக இருந்தால் கிழிந்த வலை ஒன்றை மாலையாக அணிவித்து விடுமாறு கேட்டுக்கொண்ததற்கு இணங்க அவருக்கு கிழிந்த வலை மாலையாக அணிவிக்கப்பட்டது .
கூடத்தில் கடந்தகால அரசியல் தொடர்பாக மிகுந்த வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.