உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் பணிபுரிகின்ற இடத்தில் உங்கள் மீது இருக்கின்ற நம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலாக்கள் செல்வதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். பயணங்கள் உங்களுக்கு மன மகிழ்ச்சியைத் தரும். மனதுக்குள் பலவிதமான எண்ணங்கள் தோற்ன ஆரம்பிக்கும். புதிய நண்பர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். அதனால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பணிபுரிகின்ற இடங்களில் உயர் அதிகாரிகளால் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். உங்களுக்கான பாராட்டுக்கள் குவிய ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.
ரிஷபம் தொழில் சம்பந்தமாக புதிய இலக்குகளை நிர்ணயித்து ஓடிக் கொண்டே இருப்பீர்கள். உங்களுடைய மனதுக்குப் பிடித்தவர்களுடைய கோபத்தை பொறுத்துக் கொண்டு கொஞ்சம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கல்வித் துறையில் இருப்பவர்கள் தங்களுடைய செயல்பாடுகுளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். சின்ன சின்ன காரியத் தடைகள் வந்து போகும். பெரியோர்களுடைய ஆலோசனைகளின் மூலம் உங்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.
மிதுனம் தொழிலில் புதிதாக ஏதேனும் முயற்சிகள் செய்ய வேண்டும் என்று எண்ணினால் முழு தன்னம்பிக்கையுடன் இறங்குங்கள். காது சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் குறைய ஆரம்பிக்கும். மனதுக்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உங்களுடைய செயல்களால் பணிபுரிகின்ற இடங்களில் உங்களுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் கிடைக்கும். உங்களுடைய புதிய செயல்திட்டங்களை முறைப்படுத்தும் முயற்சியில் முழுமையாக இறங்குவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.
கடகம் உங்களுடைய பேச்சுத் திறமையின் காரணமாக பொது இடங்களில் அனைவருடைய பாராட்டுக்களையும் பெறுவீர்கள். கல்வித் துறையில் இருக்கின்றவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வேலையிடத்தில் உங்களுடைய செயல்வேகங்கள் அதிகரிக்க ஆரம்பிக்கும். நண்பர்கள் மூலம் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடியான சூழல்கள் குறைந்து முன்னேற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.
சிம்மம் தொழிலில் நீண்ட காலம் எதிர்பார்த்திருந்த உங்களுக்கான பாராட்டுக்கள் கிடைக்கும். நீங்கள் எந்த காரியத்தைச் செய்தாலும் அதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். உங்களுடைய பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். புதிதாக இலக்குகளை உருவாக்குவீர்கள். உங்களுடைய லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான முழு முயற்சியல் ஈடுபடுவீர்கள். மனதுக்குள் இருக்கும் குழப்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீலம் நிறமும் இருக்கும்.
கன்னி பொது காரியங்களில் ஈடுபடுபவராக இருந்தால் உங்களுக்கு நற்பெயர்கள் தேடி வரும். அடுத்தவர்களுக்கு உதவி செய்கின்ற பொழுது கொஞ்சம் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கல்சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கொஞ்சம் நிதானம் தேவை. பெரிய மகான்களுடைய தரிசனங்களும் ஆசிர்வாதமும் உங்களுக்குக் கிடைக்கும். தலைமைப் பொறுப்பான முயற்சிகள் நிறைவேற ஆரம்பிக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு மத்தியில் உங்களுடைய செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.
துலாம் கால்நடைகளி மூலமாக நீங்கள் எதிர்பார்த்திருந்த லாபம் உங்களுக்கு வந்து சேர கொஞ்சம் கால இடைவெளி தேவைப்படும். அதனால் அடுத்த தேடலை நோக்கி நகர ஆரம்பிப்பீர்கள். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்கின்றவர்களுக்கு நல்ல அனுகூலமாக செய்திகள் கிடைக்கும். மனதில உண்டாகின்ற பலவித எண்ணங்களின் மூலம் உங்களுக்கு சில காரியத் தடைகள் உண்டாகும். வேலை செய்யுமிடத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.
விருச்சிகம் வீட்டில் உள்ளவர்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்துங்கள். உயர் பதவிகளில் இருக்கின்றவர்கள் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். தொழிலில் உங்களுடைய மதிப்புகள் கூடிக் கொண்டே போகும். பொது விவாதங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.
தனுசு உங்களுடைய உடன் பிறந்த சகோதரர்கள் மூலமாக உங்களுக்கு நிறைய அனுகூலங்கள் உண்டாகும். இதுவரையில் உங்களுக்கு மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகள் குறைந்து சாதகமான பலன்கள் அதிகரிக்க ஆரம்பிக்கும். எதிர்பாலினத்தவர்கள் மூலம் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். மனதுக்குள் நினைத்த காரியங்களால் இதுவரை இருந்து வந்த தடைகள் அகல ஆரம்பிக்கும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் தீர்ப்பு உங்களுக்குச் சாதகமாகவே இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.
மகரம் நீங்கள் எந்த காரியங்களைச் செய்தாலும் அதிலேயே தேங்கி நின்று விடுவீர்கள். பொதுக் கூட்டங்களில் பேசுகின்றவர்கள் கொஞ்சம் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. சந்திராஷ்டமம் நடப்பதால் தொழில் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுக்கிற பொழுது தகுந்த ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களிடம் கொஞ்சம் அளுசரணையோடு நடந்து கொள்ளுங்கள்.இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.
கும்பம் வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட ஈடுபடுகின்றவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலமாக நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விஷயங்களில் தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.
மீனம் இதுவரை வசூலாகாமால் நிலுவையில் இருந்த பண வரவு கைக்கு வந்து சேரும். புாட்டிகளில் வெற்றி உங்கள் பக்கமே இருக்கும். பல தடைகளைத் தாண்டி நினைத்ததை செய்து முடிப்பீர்கள். உடன் தொல்லையிலிருந்து பெரிய விடுதலை கிடைக்கும். வேலை செய்கின்ற இடங்களில் உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.