முழுமையான நீண்ட சந்திரகிரகணமொன்று எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும், அதனை இலங்கையில் பார்வையிட முடியும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவு அறிவித்துள்ளது.
21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட முழுமையான சந்திரகிரகணமாக இது அமையும். வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணிக்கு இந்த சந்திரகிரகணத்தைம் ஆரம்பமாவதாகவும் 100 வருடங்களின் பின்னர் நிகழும் ஒரு வானியல் மாற்றமாகவும் இது காணப்படும் எனவும் அத்துறையின் பேராசிரியர் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

