ஸ்ரீபொதுஜன பெரமுனவினால் மேற்கொள்ளப்படவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடையும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி இந்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்திருந்ததாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, நாமல் ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார்.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை நடைபெற உள்ளதால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி பிற்போடப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான கலந்துரையாடல்களை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

