எட்டு முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த பெம்பா ஷெர்பா என்ற வீரர் காணாமல் போனார்.மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் வசித்து வந்த அவர், கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி ஒரு அணியுடன் சேர்ந்து இமயமலையில் மலையேறச் சென்றிருந்தார்.
சாசர் கங்க்ரி என்ற இடத்தை வெற்றிகரமாக அடைந்த அவர்கள், அங்கிருந்து கீழே இறங்கியுள்ளனர்.அணியைச் சேர்ந்தவர்களை முன்னால் அனுப்பிவிட்டு கடைசியாக வந்த ஷெர்பா, வெள்ளியன்று காணாமல் போனதாக திபெத்திய போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 13-ஆம் தேதியன்று ஷெர்பா தங்களுடன் தொலைபேசியில் பேசியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

