Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

’எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் ஆயுள் எண்ணப்பட்டு வருகிறது’ – திவாகரன் அதிரடி

August 31, 2017
in News, World
0

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் ஆயுட்காலம் எண்ணப்பட்டு வருவதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

ஈரோட்டில் உறவினர் திருமணத்துக்காக திவாகரன் இன்று வந்திருந்தார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ”எங்களுடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் முதல்வருக்குக் கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கிக்கொண்டார்கள். அதற்கு கவர்னர் என்ன செய்ய வேண்டும்? சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட்டி புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க உத்தரவிட வேண்டும். ஆனால், உட்கட்சி பிரச்னை என்று முறையற்றப் பதிலை கவர்னர் சொல்லுகிறார். எங்களது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் மட்டும் இல்லை. எங்களுக்கு 48 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். முதலமைச்சர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக 19 பேர் கவர்னரிடம் கடிதம் கொடுத்தது போதும், 48 பேரும் கடிதம் கொடுக்க வேண்டாம் என்று நாங்கள்தான் கேட்டுக் கொண்டிருக்கிறோம். கொங்கு மண்டலத்தில் 4 எம்.எல்.ஏ-க்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களைத் தவிர நிறைய பேர் என்னிடம் நேற்று போனில் பேசினார்கள். அண்ணா நாங்கள் கல்யாணத்துக்குச் சென்றுவிட்டதால் உங்களைச் சந்திக்க முடியவில்லை என்று கூறினார்கள்.

கட்சி நிலைக்க வேண்டும். கட்சியும், ஆட்சியும் பிண்ணிப் பிணைந்தது. ஆளுங்கட்சியாக இல்லாமல் இருந்திருந்தால் பரவாயில்லை. ஆளுங்கட்சியாக இருக்கும்போது நல்லது கெட்டது அனைத்தும் அரசைச் சார்ந்து இருக்கும். தெளிவான அரசைக் கொடுத்தால்தான் ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க., நிலைக்கும். ஜெயலலிதா என்ற மாபெரும் சக்தியை இழந்திருக்கும் சூழ்நிலையில், ஊழலற்ற நல்லாட்சி கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு போல சுறுசுறுப்பான ஆட்சியாக, ஊழல் இல்லாத ஆட்சியாக இயங்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அண்ணன் தோல்வி அடைந்துவிட்டார். அவர் மிகச் சிறந்த நிர்வாகிதான். ஆனால் கட்சியையும், ஆட்சியையும் அவர் இழந்துவிட்டார். தற்போது அரசு கான்ட்ராக்ட் வேலைகளுக்கு 24 சதவிகிதம் லஞ்சம் வாங்குகிறார்கள். சத்துணவு ஆயா வேலைக்கு ரூ.2 லட்சமும், வனத்துறை டி.எஃப்.ஓ.,க்கு கீழ் இருக்கும் ஊழியர்களுக்கு ரூ.5 லட்சமும், டி.எஃப்.ஓ.,மாறுதலுக்கு ரூ.10 லட்சமும் வாங்குகிறார்கள். இதற்கெல்லாம் ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது.

ஊழல் புகார் என ஏதாவது ஒன்று, இரண்டு இருந்தால் சொல்லலாம். ஆனால் எல்லாவற்றிலும் ஊழலாக இருக்கிறது. ஜெயலலிதா நோய்வாய்ப்பட்ட பிறகு தமிழக அரசுக்கு எப்படி ரூ.2 லட்சம் கோடி கடன் வந்தது. இந்தியா குடியரசு ஆன பிறகு தமிழ்நாடு என்று உதயமானதோ, அன்றிலிருந்து காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., என மாறி மாறி ஆட்சி செய்திருக்கிறது. இந்த 63 ஆண்டுகளில் மொத்தமாக எல்லாத் துறையிலும் வாங்கிய கடன் 1 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் கடந்த 2011 முதல் 2012 வரை மட்டுமே 2 லட்சம் கோடி ரூபாய் கடன். இந்த கடன் உங்க தலையிலும், என் தலையிலும் விடியும். கடன் வாங்கியே கஜனாவை காலிசெய்து விட்டார்கள்.

தற்போது தட்கல் முறையில் விரைவாக மின் இணைப்புப் பெறும் புதிய திட்டத்தை தங்கமணி அறிவித்து இருக்கிறார். ஏற்கெனவே மின்சாரம் இல்லை. மின் மிகை மாநிலம் என்று சொல்லுகிறார்கள். மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் இருந்தால்தான் அது மின் மிகை மாநிலம். ஆனால், எங்க தஞ்சை டெல்டா பகுதியில் பகலில் 3 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமும்தான் மின்சாரம் இருக்கிறது. இதை எப்படி மின்மிகை மாநிலம் என்று சொல்ல முடியும். ஆயிரக்கணக்கான பேரிடம் தட்கல் கனெக்‌ஷன் என்று சொல்லி ஒவ்வொருவரிடமும் ரூ.3 லட்சம் வசூலித்து இருக்கிறார்கள். வெறும் கவர்மென்ட் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம், தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல் வரலாற்றுப் பிழையை செய்துகொண்டிருக்கிறார்கள்.

கையாலாகாத சிலர் நாங்கள் தி.மு.கவோடு இணைகிறோம் என்று கூறிவருகிறார்கள். தி.மு.க.தான் எங்கள் முதல் எதிரி. கடந்த 2 மாதமாக ஒப்பந்த வேலைகளுக்கும், சட்டசபை நிகழ்வுக்கும் தி.மு.க-வின் முக்கிய தலைவர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் ஆயுள் எண்ணப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் இல்லாமல், தனபால் தலைமையில் ஆட்சி நடந்தால் ஊழலற்ற நல்லாட்சியாக இருக்கும்’ என்று அவர் கூறினார்.

Previous Post

பிரித்தானிய பிரதமர் இல்லத்தின் முன்பாக அனுட்டிக்கப்பட்ட அனைத்துலக காணாமல்போனோர் தினம்

Next Post

இளைஞர்களை மிரட்டி பணிய வைக்கும் ப்ளூவேல் கும்பல்

Next Post
இளைஞர்களை மிரட்டி பணிய வைக்கும் ப்ளூவேல் கும்பல்

இளைஞர்களை மிரட்டி பணிய வைக்கும் ப்ளூவேல் கும்பல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures