வருடத்தின் முதல் வாரத்தில் 2000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய கடந்த 2 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை 2142 டெங்கு நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 440 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனை தவிர கொழும்பில் 433 டெங்கு நோயாளர்களும், புத்தளத்தில் 273 டெங்கு நோயாளர்களும், கல்முனையில் 147 டெங்கு நோயாளர்களும், யாழ்ப்பாணத்தில் 128 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தலா 100 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.