ஜனநாயக தேசிய முன்னணியாக உருவெடுக்கவுள்ள எமது கூட்டணியை எவராவும் அசைக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“எமது கட்சிக்கோ அல்லது நாம் உருவாக்கும் ஜனநாயக தேசிய முன்னணிக்கோ எவரும் எதிரிகள் இல்லை. ஏனெனில் எமது இந்தக் கூட்டணி பலமானது. எவராலும் அசைக்க முடியாது.
பல கட்சிகளை ஒன்றிணைத்துக்கொண்டு ஐக்கிய தேசிய முன்னணியாகத் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி பலத்துடன் இருக்கின்றது. எதிர்காலத்தில் இந்தக் கூட்டணி ஜனநாயக தேசிய முன்னணியாக உருவெடுக்கும்.
மஹிந்த குடும்பம் எமக்கு சவாலாக இருப்பதாக சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதில் எந்த உண்மையும் இல்லை. நாம் யாருக்கும் அஞ்சப் போவதில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ எம்மை வீழ்த்தலாம் என கனவிலும் கூட இனிமேல் நினைக்கக்கூடாது” என அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

