வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வில் நிறைவேற்றிய தீர்மானங்களில் ஊழியர்கள் நியமனம் தீர்மானத்தினை நடைமுறைப் படுத்து முடியாது என கை விரித்த அதிகாரிகள் இரண்டாவது தீர்மானத்திற்கும் சட்ட ஏற்பாடுகளோ அல்லது சுற்றறிக்கைகளோ எவையும் கிடையாது . என கை விரித்து விட்டனர்.
வடக்கு மாகாண சபையின் 38 உறுப்பினர்களிற்குமான தனிப்பட்ட அலுவலகங்களிற்கு கொள்வனவு செய்த தளபாடங்களை பதிவு நீக்கம் செய்ய வேண்டும். என வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டருந்த நிலையில்
குறித்த நிதி சபையின் நேரடியான நிதியாக கானப்பட்ட நிலையில் உறுப்பினர்களின் அலுவலகங்களிற்கு கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் பேரவைச் செயலக சொத்து விபரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இணைக்கப்பட்ட சொத்துக்களை உறுப்பினர்களிடமே கையளிப்பதானால் அவற்றினை மீண்டும் சொத்துப் பதிவு நீக்கம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. அவ்வாறு சொத்துப் பதிவு நீக்கம் செய்வதற்கு சபையின் அனும்மி மட்டும் போதாது எனவே அவற்றினை மீளவும் கையளிக்க வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது. இதேநேரம் குறித்த விடயம் தொடர்பில் அவ்வாறு சொத்துப் பதிவு நீக்கம் செய்ய முடியாது. என கணக்காய்வு திணைக்களமும் சுட்டிக்காட்டியுள்ளதனால் மேற்படி சொத்துகளை மீளக் கையளிக்க வேண்டும் என உறுப்பினர்களிடம் கோரப்படவுள்ளது.