Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் எவ்வாறு செயற்பட வேண்டும்!!

May 9, 2020
in News, Politics, World
0

ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பது தொடர்பில் சுகாதார அமைச்சினால் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதற்கு அமைவாக வைரஸ் தொற்று காலத்துக்கு முன்பு போல் அல்லாமல் அதன் பின்னர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை நாம் சிந்தித்து செயல்படுவது அவசியம் என்று தெரிவித்த அவர், குறிப்பாக அரச ,அரச சார்பற்ற மற்றும் ஏனைய நிறுவனங்கள் கைத்தொழில் துறை நிறுவனங்கள் உட்பட அத்தியவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் இணையதளத்திலும், பிரதமர் அலுவலக இணைய தளத்திலும் அதனை பார்வையிட முடியும். இதனை அறியவில்லை எனக் கூறி தட்டிக்கழிக்க முடியாது என்று தெரிவித்த பணிப்பாளர் நாயகம் இந்த விடயங்களில் தெளிவில்லை என்றால் எமது அதிகாரிகள் குழு அதனை தெளிவுபடுத்த தயாராக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு தவிர்ந்த வெளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிசிஆர் பரிசோதனைகள் தரமற்றவையென
மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் குறித்து கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ,இவ்வாறு தற்போது பிரசாரங்களை மேற்கொள்பவர்களே முன்பு அதற்காக பல்கலைக்கழகங்கள் மற்றும் கற்கை பீடங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளுமாறு கோரியிருந்தனர் பிசிஆர் பரிசோதனையா- அல்லது தனிமைப்படுத்தல்
செயற்பாடுகளா? எது மிக முக்கியமென பார்க்கும்போது தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மிக முக்கியமானதும் அவசியமுமாகிறது. தனிமைப்படுத்தலுக்குப் பின்னரும் கூட பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளலாம். எனினும் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கு தனிமைப்படுத்தல் மிக முக்கியமாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

பிசிஆர் பரிசோதனைகள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் எவ்வாறெனினும் பரிசோதனைக்கூடங்கள் தற்போது விரிவாக்கப்பட்டு பரிசோதனைகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு நிறுவனங்கள் ஏற்கனவே பரிசோதனைகளை முன்னெடுத்த போதும் கொரோனா வைரஸ் தொடர்பான பிசிஆர் பரிசோதனை தொடர்பில்
அவர்களுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளது. அதேவேளை இத்தகைய பரிசோதனை கூடங்கள் ஆரம்பிக்கப்படும் முன்பே அது தொடர்பான மதிப்பீடு மேற்கொள்ளப்படுகின்றது. நாம் அதற்கு மேலதிகமாக தற்போது மேற்படி பரிசோதனைக் கூடங்கள் தொடர்பில் மேலும் மதிப்பீடு ஒன்றை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம். அதனையடுத்து நாம் பேராசிரியர் மலிக் பீரிசின் ஒத்துழைப்புடன் சகல பரிசோதனைக் கூடங்களையும் தனித் தனியாக தரப்படுத்தலுக்கு உட்படுத்த உள்ளோம்.

அதேபோன்று எமது நீண்ட கால வேலைத்திட்டமாக உலக சுகாதார அமைப்பின் மூலம் அவற்றை தரநிர்யம் செய்வதற்கு உத்தேசித்துள்ளோம். எவ்வாறாயினும் காலத்துக் காலம் பொருத்தமான வகையில் அவற்றை கண்காணிப்புக்கு உட்படுத்துவது இடம் பெறும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.
வழிகாட்டல் அறிக்கையினை தரவிறக்கம் செய்ய கீழுள்ள இணைப்பினை பார்வையிடவும்
 http://www.pmoffice.gov.lk/download/press/D00000000011_TA.pdf
Previous Post

திக்கோடையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண்

Next Post

ஆயுள் காப்புறுதி பயனாளர்கள் தங்கள் தவணைப் பணத்தைச் செலுத்த விடுவிப்புக் காலம்

Next Post

ஆயுள் காப்புறுதி பயனாளர்கள் தங்கள் தவணைப் பணத்தைச் செலுத்த விடுவிப்புக் காலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures