கொரோனா எனப்படும் கொவிட் 19 வைரஸ் தொற்று உலகம் பூராகவும் பரவி பல இலட்சம் மனித உயிர்களை குடித்துக்கொண்டு இருக்கிறது .
அவ்வாறே கனடாவில் பரவிய இந்த நோய் இலங்கை தமிழ் தம்பதிகளின் உயிரையும் குடித்திருக்கிறது .
இது யாரும் எதிர்பாராதது. மரணம் சொல்லிக்கொண்டு வருவதும் இல்லை சொல்லிவிட்டு நிலைப்பதும் இல்லை .
இதை ஊடகங்கள் ,ஊடகர்கள் சரியாக புரிந்துகொள்ளவேண்டும் .
கனடா உதயன் பத்திரிகையின் விநியோகஸ்தரான சோதி என அழைக்கப்படும் நபர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய விடயத்தை எந்த வலைத்தளமூடாகவும் வெளிப்படுத்தாமல் அந்த பத்திரிகையின் ஆசிரியர் மறைத்துவிட்டார் என குற்றம் சுமத்தப்படுகிறது .
ஒரு பத்திரிகை ஆசிரியருக்குரிய கடமையை செய்யாது மாபெரும் தவறை கனடா உதயன் பத்திரிகை ஆசிரியர் செய்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை .
காரணம் எந்தவகையிலும் மற்றவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற விழிப்புணர்வோடு அவர் செயற்படவில்லை .
இது வருந்ததக்கது ,தனது பணியாளரின் மரணத்துக்கு பிற்பாடும் தனது பத்திரிகை விநியோகிக்கப்பட்ட இடங்களை பத்திரிகை வாங்கிய நபர்களை எச்சரிக்காமை வருந்த தக்கது .
ஒரு ஊடகவியலாளனாக ,பத்திரிகை ஆசிரியராக பலவருட அனுபவம் கொண்ட ஒருவராக நா.லோகேந்திரலிங்கம் இந்த விடயத்தில் அக்கறையுடன் செயற்பட்டிருக்கலாம்.
ஆனால் CMR எனப்படும் வானொலி அறிவிப்பாளர் உதயன் நாகரிகமற்ற முறையில் இன்னொரு ஊடகத்தை மிக கீழ்த்தரமாகவும், ஊடக நெறிமுறைகளுக்கு அமைவில்லாமலும் கேள்வி கேட்கின்றேன் என்ற தோரணையில் வேலி சண்டைபோல் நையப்புடைத்தமை நாகரீகமற்ற செயல் .
தனது பல நிகழ்சிகள் இருந்தும், கனடா உதயன் பத்திரிகை ஆசிரியர், ஊடகவியலாளர் உதயனின் சமையல் நிகழ்ச்சி சிறப்பாக இருக்கின்றது என்று பாராட்டியதை, ஒரு மோசமான கறலாக வைத்துக்கொண்டு, நாகரீகமற்ற முறையில் உங்கள் பத்திரிகை புரட்டப்படுவதில்லை,மரக்கறி வெட்டிட பயன்படுத்தப்படுகிறது என பேசுவதற்கு எந்த ஊடக அதிகாரத்தையும் அவர் கொண்டிருக்கவில்லை .
தன்னை இழிவு படுத்தியமைக்கு நேரடியாக மோதாமல் இன்னொரு பொது பிரச்சனையை கையில் எடுத்து கீழ்த்தனமான ஊடக செயற்பாட்டை செய்தமை கண்டிக்கதக்கது .


