ஊடகவியலாளர்கள் அச்சமின்றி பணிபுரிவது அவசியம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்திலுள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் பின்னர் ட்ரம்ப் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்யார்.
அத்தோடு, வௌ்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ட்ரம்ப், துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு கண்டனம் வௌியிட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவங்களுக்கு அச்சமின்றி ஊடகவியலாளர்கள் தமது பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேரிலாந்து மாநிலத்திலுள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றில் ஆயுததாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

