ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகண்டு அவர்களை முன்னேற்றும் வகையில் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதே தனது எதிர்பார்ப்பு என புதிய ஊடகத்துறை அமைச்சரான ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுடனும் ஊடகவியலாளர்களுடனும் நெருக்கமாகச் செயற்பட்டு ஊடகத்துறையை சிறந்த தொழிற் துறையாக கட்டியெழுப்புவதற்கு தாம் உச்ச அளவில் அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகத்துறை அமைச்சில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.