Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனவரி,பெப்ரவரியில் தேர்தல்

July 18, 2017
in News, Politics
0
உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனவரி,பெப்ரவரியில் தேர்தல்

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் அதி­கா­ரத்தில் உள்ள ஆணை­யா­ளர்கள் இன்னும் ஆறு மாதத்­திற்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான அதி­கார பொறுப்பை ஏற்­க­வேண்டும். ஏனெனில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் ஜன­வரி அல்­லது பெப்­ர­வரி மாதங்­களில் நடத்­தப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

குப்பையினை வைத்து பெரும் மோச­டிகள் நடக்­கின்­றன. குப்பை கொட்­டு­வ­தற்கு பாதாள உலக கோஷ்­டி­களும் மோசடி கும்­பல்­களும்

பெரும் தடை­யாக உள்­ளன. எவ்­வா­றா­யினும் அனைத்து தடை­க­ளையும் உடைத்­தெ­றிந்து குப்பை பிரச்­சினையை தீர்ப்பேன். அடுத்த அர­சாங்­கத்­திற்கு குப்பை பிரச்­சி­னையை வைத்து விட்டு செல்ல மாட்டேன் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

குப்பை முகா­மைத்­துவம் மற்றும் டெங்கு நோய் தொடர்­பாக நாடு­பூ­ரா­கவும் உள்ள 335 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் ஆணை­யா­ளர்­க­ளுக்­கான விசேட செய­ல­மர்வு நேற்று கொழும்­பி­லுள்ள இலங்கை மன்ற கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனாதிபதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேலும் உரை­யாற்­று­கையில்,

தற்­போது அனைத்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் அதி­கா­ரங்கள் ஆணை­யா­ளர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. முன்பு மக்கள் பிர­தி­நி­தி­க­ளான மேயர்கள், பிர­தேச சபை தவி­சா­ளர்­க­ளுக்கு இருந்த பொறுப்­பு­களும் கட­மை­களும் அதி­கா­ரங்­களும் ஆணை­யா­ளர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை கலைப்­ப­தற்கு அதி­காரம் எமக்கு கிடை­யாது. காலம் நிறை­வ­டைந்­த­வுடன் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான காலத்தை நீடிக்க முடியும். தற்­போது அனைத்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான காலம் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

இதன்­படி உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை விரைவில் நடத்தி மக்கள் பிர­தி­நி­தி­களை விரைவில் தேர்ந்­தெ­டுக்­க­வுள்ளோம். உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான சட்­ட­மூ­லத்தில் பெரும் குறைப்­பா­டுகள் காணப்­பட்­டன. இதன்­கா­ர­ண­மாக பல தரப்பில் இருந்து எதிர்ப்­பு­களும் பிரச்­சி­னை­க­ளும் ஏற்­பட்­டன. இத­னை­ய­டுத்து அர­சாங்கம் என்ற வகையில் நீதி‍யை நிலை­நாட்டும் நோக்கில் சுமார் ஒன்­றரை வருடம் குறைப்­பா­டு­களை திருத்தம் செய்­வ­தற்­கான பணி­களை முன்­னெ­டுத்தோம்.

இந்த சட்­ட­மூலம் தொடர்பில் 1500 முறைப்­பா­டுகள் கிடைக்­க­பெற்­றன. இந்த குறைப்­பா­டு­களை நிவர்த்தி செய்­வ­தற்கு தேர்­தல்கள் ஆணைக்­குழு, மாகாண மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சு,உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சு ஆகிய மூன்று நிறு­வ­னங்­களும் இணைந்து குறைப்­பா­டு­களை நிவர்த்தி செய்­வ­தற்கு ஒரு­மித்து செயற்­பட்­டன. இதன்­கா­ர­ண­மாக குறைப்­பா­டு­களை நிவர்த்தி செய்ய எமக்கு காலம் தேவைப்­பட்­டது.

இதே­வேளை வடக்கு உள்­ளிட்ட சில மாகா­ணங்­களில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் பெரும் வெற்­றி­டங்கள் நில­வு­கின்­றன. எனினும் நான் ஒன்றை கூறிக்­கொள்ள விரும்­பு­கின்றேன். ஏற்­க­னவே தற்­கா­லி­க­மாக இணைக்­கப்­பட்ட ஊழியர்கள் வேறு காரி­யங்­களில் ஈடுப்­பட்­டுள்­ளனர். தற்­போதை 335 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஒரு சில பிர­தேச மற்றும் மாந­கர சபை­களில் முன்பு இருந்த மேயர், தவி­சா­ளர்­களின் ஆதிக்கம் தொடர்ந்து காணப்­ப­டு­வ­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இதன்­படி சில உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் சில தவி­சா­ளர்கள், மேயர்கள் தொடர்ந்தும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு சொந்­த­மான வாக­னங்­க­ளையும் உடை­மை­க­ளையும் பயன்படுத்துகின்றனர்.

உள்­ளு­ராட்சி மன்ற நிறு­வ­னங்­களில் சில ஊழி­யர்கள் குறித்த மேயர்­க­ளுக்கும் தவி­சா­ளர்­க­ளுக்கும் உதவி, ஒத்­தாசை புரி­கின்­றனர். எனவே இது தொடர்பிர் உள்­ளூ­ராட்சி மன்ற ஆணை­யாளர் பொறுப்­பு­ணர்­வுடன் செயற்­பட வேண்டும்.

அத்­துடன் குப்பை சம்­பந்­த­மாக பல்­வேறு பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டுள்­ளன. குப்பை மேட்­டினால் மீதொட்­ட­முல்­லையில் பேனர்த்தம் ஏற்­பட்டு பல அப்­பாவி பொது மக்கள் உயி­ரி­ழந்­தனர். நான் ஒன்றை கூற விரும்­பு­கின்றேன். குப்பை முகா­மைத்­துவம் தொடர்பில் இதற்கு முன்பு இருந்த அர­சாங்­கங்­க­ளுக்கு ஒரு தேசிய கொள்கை இருக்­க­வில்லை.

இதன்­கா­ர­ண­மா­கவே குப்பை விவ­காரம் இவ்­வ­ளவு தூரத்­திற்கு வந்­துள்­ளது. குப்பை முகா­மைத்­துவம் செய்­வ­தற்கு பதி­லாக குப்­பையை குவித்து மேடாக்­கினர். அந்த குப்பை மேடு கீழே விழுந்து உயி­ரி­ழப்­பு­களும் ஏற்­பட்­டன. அந்த குப்பை மேடு அர­சாங்­கத்­திற்கு ‍மேலேயும் விழுந்­தது. அதா­வது அர­சாங்­கத்தின் மீதே விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன. நாட்டில் சில உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­களில் குப்பை முகா­மைத்­து­வத்­திற்கு கொள்கை காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக பலாங்­கொடை பிர­தேச சபை உட்பட சில உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் குப்பை முகா­மைத்­துவம் தொடர்பில் கொள்கை உள்­ளன. எனினும் அனைத்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளிலும் இவ்­வா­றான கொள்கை இல்லை.

குப்­பையை வைத்து பண­மீட்ட கூடி­ய­வர்­க­ளி­னால்தான் இந்த பிரச்­சினை ஏற்­பட்­டது.குப்­பையை வைத்து மோசடி செய்ய கூடிய கும்பல் இருந்­தது. மேலும் பாதாள உலக கோஷ்­டி­யி­னரும் தலை­யீடு செய்­துள்­ளனர். குப்பை கொட்­டு­வ­தற்கு பாதாள உலக கோஷ்­டி­களும் மோசடி கும்­ப­ல்களுமே பெரும் தடை­யாக உள்­ளன. அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்­சர்கள் சிலர் கூட தமது பிர­தே­சங்­களில் குப்பை குவிப்­ப­தற்கு எதிர்ப்பு வெளி­யிட்டு போராட்­டங்­களில் ஈடு­ப­டு­கின்­றனர். உலக நாடு­களில் இலங்­கையில் மாத்­தி­ரமே இப்­ப­டிப்­பட்ட அமைச்­சர்கள் உள்­ளனர்.

எனினும் அனைத்து தடை­க­ளையும் உடைத்தெறிந்து குப்பை பிரச்சினையை தீர்ப்பேன். அடுத்த அரசாங்கத்திற்கு குப்பை பிரச்சினையை வைத்து விட்டு செல்ல மாட்டேன் .

ஆகவே எவ்வாறாயினும் மாநகர , நகர சபையின் மேயர்களினதும் பிரதேச சபை தவிசாளர்களினதும் கடமைகளையும் பொறுப்புகளையும் உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்கள் இன்னும் 6 மாதங்களுக்கு செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில் உள்ளூராட்சி மன்றத்திற்கு ஜனவரி அல்லது பெப்ரவரி மாதம் அளவில் மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவர். உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் தமது பொறுப்புகளை உரிய முறையில் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

Previous Post

யானை தாக்கி விவசாயி பரிதாபமாக பலி

Next Post

டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 81 பேருக்கு சிகிச்சை!

Next Post
டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 81 பேருக்கு  சிகிச்சை!

டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 81 பேருக்கு சிகிச்சை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures