உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு மாத கொடுப்பனவாக 15 ஆயிரம் ரூபாவினை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள், கையடக்க தொலைபேசி கொடுப்பனவு, பெக்ஸ் இயந்திரங்கள் போன்ற ஏனைய வசதிகள் வழங்கப்படாது எனவும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் கமால் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு செல்லிடப் பேசி உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகள் தேவை எனின், உள்ளுராட்சி நிர்வாகத்தை சிறப்பான முறையில் முன்னெடுத்து வரி வருமானத்தின் ஊடாக சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த முறை உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ள 8 ஆயிரத்து 700 உறுப்பினர்களுக்காக 12 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.