உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் திருத்தச் சட்டத்தில் இன்று மதியம் 12.15 மணியளவில் சபாநாயகர் கைச்சாத்திடவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட இழுப்பறிக்கு மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் 74 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டத்துக்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்த நிலையில், எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்படவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தன