இம்மாதம் 28 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் எதிர்பாராத சிலர் இணைந்துகொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.
இக்காலப் பிரிவில் பெரும்பாலான அரசியல்வாதிகள், தொழிற்சங்கங்களின் தலைவர்கள் உட்பட பலர் தம்முடன் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாம் துப்பறவான ஆடை அணிந்திருப்பது போலவே உள்ளாடையும் சுத்தமாகவே அணிந்துள்ளோம் என்பதை இம்முறை நிரூபித்துக் காட்டுவோம் எனவும் இராஜாங்கா அமைச்சர் மேலும் கூறினார்.