உள்நாட்டுக் கலைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காக தனது பதவிக்காலத்தில் உயர்மட்டத்தில் அர்ப்பணிப்பு செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் வெற்றிக்காக அர்ப்பணிப்பு செய்த கலைஞர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கலைஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்திக் கொடுப்பது தனது எதிர்பார்ப்பு என இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கலைஞர்களுக்காக அமைக்கப்பட்ட ரன்மினிதென்ன சினிமா கிராமம் கடந்த சில மாதங்களாக கைவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன்மூலம் உரிய பிரதிபலனைபெற்றுக்கொள்ளுமாறு கலைஞர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்களில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

