இந்தியா டெல்லி வன்முறையின்போது கொலைசெய்யப்பட்ட உளவுத்துறை அதிகாரியின் உடலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறையில் தலைமைக் காவலர், உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா உள்ளிட்ட 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்க காவல்துறையில் 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஆயுதம் தாங்கிய பொலிசார் தொடர்ந்து ரோந்து சென்றவண்ணம் உள்ளனர்.
டெல்லி சந்த்பாக் பகுதியைச் சேர்ந்த அன்கிட் சர்மா வன்முறை நடந்த தினத்தன்று மாலை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய பின்னர் மீண்டும் நிலைமைகளை அறிந்துகொள்வதற்காக வெளியில் சென்றுள்ளார்.
இதன்போது அவரை சுற்றிவளைத்த வன்முறையாளர்கள் மிக கொடூரமாக கொலை செய்து கால்வாயில் வீசி சென்ற நிலையில் அவரது உடல் மறுநாள் காலையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

