உலக காலநிலை மாற்றத்தினால் இலங்கையில் பட்டினிநிலைமை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2050ம் ஆண்டில் பாதிக்கப்படவுள்ள நாடுகளில் இலங்கையும் முக்கிய இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக அளவில் காலநிலை மாற்றத்தின் காரணமாக 2050ம் ஆண்டு பட்டினி நிலைமை 20 சதவீதத்தினால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பாதிப்பு இலங்கையிலும் இருக்கும் என கூறப்படுகின்றது.
இலங்கையில் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காலநிலை மாற்றம் சார்ந்த காரணிகளால் பாதிக்கப்படுவார்கள் என்றும் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளால் பருவ மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளமையால் அரிசி உள்ளிட்ட விவசாய உற்பத்திகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் எதிர்வரும் சில ஆண்டுகளில் நாட்டைச் சூழவுள்ள கடலின் நீர்மட்டம் 1 மீற்றரால் உயரும் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடற்கரைப் பகுதியில் அதிக அளவிலான புயல் மற்றும் உப்புக் காற்று என்பவற்றின் காரணமாக விவசாய நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.