Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உலக கலவை குத்துச்சண்டை போட்டியில் 5 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்று இலங்கை சாதனை

May 15, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
உலக கலவை குத்துச்சண்டை போட்டியில் 5 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்று இலங்கை சாதனை

இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற இரண்டாவது உலக கலவை குத்துச்சண்டை வல்லவர் (2nd World Mix Boxing Championship 2023) போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய 7 வீர, வீராங்கனைககளும் பதக்கங்கள் சுவீகரித்து வரலாறு படைத்தனர்.

காஷ்மீர், ஸ்ரீநகர் எஸ்.கே. உள்ளக விளையாட்டரங்கில் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெற்ற உலக கலவை குத்துச்சண்டை வல்லவர் போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகள் 5 தங்கப் பதக்கங்களையும் 4 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றெடுத்தனர்.

உலக கலவை குத்துச்சண்டை சம்மேளனத்தின் அனுமதியுடன் இந்திய கலவை குத்துச்சண்டை சம்மேளனம்  நடத்திய  இப் போட்டியில் 26 நாடுகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் பங்குபற்றினர்.

எடைப்பிரிவு மற்றும் பகிரங்க பிரிவு ஆகிய இரண்டு வகைப் பிரிவுகளைக் கொண்ட இப் போட்டியில் சண்முகநாதன் சஞ்சயன் ஜயவர்தன செவ்மினி இமேஷா ஆகிய இருவரும் இரண்டு  பிரிவுகளிலும் தலா ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்று பலத்த பாராட்டைப் பெற்றனர்.

அத்துடன் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவிகள் மூவர் பதக்கங்கள் சுவீகரித்தது விசேட அம்சமாகும். இவர்கள் மூவரும் 19 வயதுக்குட்பட்ட  மாணவிகளாவர்.

பதக்கங்கள் விபரம்

ஆண்கள்

சண்முகநாதன் சஞ்சயன் (முல்லைத்தீவு) 70 – 75 கிலோ கிராம் எடைப் பிரிவில் தங்கம், பகிரங்கப் பிரிவில் வெள்ளி

முருகன் விநோத் (வவுனியா) 65 – 70 கிலோ கிராம் எடைப் பிரிவில் தங்கம்

குமார் கிருஷாந்தன் (வவுனியா) 55 – 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் வெள்ளி

பெண்கள்

ஜயவர்தன செவ்மினி இமேஷா (மடுக்கந்தை) 55 – 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் தங்கம், பகிரங்க பிரிவில் வெள்ளி.

தட்சணாமூர்த்தி மகிஷா (வவுனியா, விபுலானந்தா கல்லூரி) 60 – 65 கிலோ கிராம் எடைப் பிரிவில் தங்கம்

சிவகுமார் தர்ணிகா (வவுனியா விபுலானந்தா கல்லூரி) 50 – 55 கிலோ கிராம் எடைப் பிரிவில் தங்கம்

ராமநாதன் திவ்யா (வவுனியா ராசேந்திரகுளம் தமிழ் கலவன் பாடசாலை) 45 – 50 கிலோ கிராம் எடைப் பிரிவில் வெள்ளி

அவர்களின் இச்சாதனையை பாராட்டும் வகையில் வவுனியா கந்தசாமி கோவில் முன்றலில் மலர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கை கலவை குத்துச்சண்டை  சங்கத்தின் (Sri Lanka Mix Boxing Association) தலைவர் எம்.எஸ். நந்தகுமார் தலைமையில் உலக கலவை குத்துச்சண்டைப் போட்டியில் பங்குபற்றிய 7 வீர, வீராங்கனைகளும் வட மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் பங்குபற்றிய வீர, வீராங்கனைகளின் எண்ணிக்கைக்கு அமைய விகிதாசார அடிப்படையில் ஒட்டுமொத்த நிலையில் இலங்கை 2ஆம் இடத்தைப் பெற்றது.

இந்தியா முதலாம் இடத்தையும் நேபாளம் மூன்றாம் இடத்தையும் பெற்றன.

இந்த வெற்றி தொடர்ப்பாக கருத்து வெளியிட்ட இலங்கை கலவை குத்துச்சண்டை சங்கத் தலைவர் நந்தகுமார், ‘உலக கலவை குத்துச்சண்டை சம்மேளனத்தில் அங்கத்துவம் பெற்று ஒரு வருடம் ஆன நிலையில் இரண்டாவது தடவையாக உலக கலவை குத்துச்சண்டை எடைப்பிரிவு மற்றும் பகிரங்கப் பிரிவு ஆகிய இரண்டு வகை போட்டியில் பங்குபற்றி இலங்கையினால் 5 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்களை சுவீகரிக்க முடிந்ததையிட்டு பெருமை அடைகிறேன். வீர, வீராங்கனைகளின் அர்ப்பணிப்புத்தன்மையும் விடா முயற்சியுமே இந்த வெற்றிக்கு காரணமாகும்.

‘இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட இவ் விளையாட்டு இலங்கையில் வட மாகாணத்தில் மாத்திரமே பிரபல்யம் அடைந்துள்ளது. மேலும் விளையாட்டுத்துறை அமைச்சில் எமது சங்கம் அடுத்த வருடமே பதிவு செய்யப்படவுள்ளது. 

எனினும் உலக கலவை குத்துச்சண்டை சங்கத்தில் எமது சங்கம் பதிவுசெய்யப்பட்டுள்ளதல் இந்திய போட்டியில் பங்குபற்றி விளையாட்டுத்துறை அமைச்சு எமக்கு அனுமதி வழங்கியிருந்தது. 

மேலும் இவ்விளையாட்டை இலங்கை முழுவதும் வியாபிக்கச் செய்ய எமது சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் பின்னர் தேசிய மட்டத்தில் கலவை குத்துச்சண்டைப் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

Previous Post

வடக்கு, கிழக்கில் காணிகளை அபகரிக்க இடமளிப்பது நல்லிணக்க விடயங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் – ஹக்கீம்

Next Post

அமேசான் பிரைம் வீடியோவின் ‘மொடர்ன் லவ் சென்னை’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Next Post
அமேசான் பிரைம் வீடியோவின் ‘மொடர்ன் லவ் சென்னை’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

அமேசான் பிரைம் வீடியோவின் 'மொடர்ன் லவ் சென்னை' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures