உலகிலேயே சக்திவாய்ந்த ரோபோவை ஹாங்காங் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். புழுபோன்ற அமைப்புடன் செய்யப்பட்டுள்ள இது மில்லிரோபோ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு மில்லிமீட்டர் நீலமே கொண்ட இந்த ரோபோ மனித உடலுக்குள் செலுத்தப்பட்டு தேவைப்படும் இடத்தை ஆராய்ச்சி செய்யவும், முடிந்தால் அறுவை சிகிச்சை செய்யவும் பயன்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதவிர அதிக அழுத்தத்தை இந்த ரோபோ தங்குவதால், உலகில் சக்திவாய்ந்த ரோபோ என்ற சாதனையும் படைத்துள்ளது. மனிதரின் மேல் சிறிய பேருந்தை ஏற்றி நிற்கச்செய்யும் அளவுக்கு இதன் அழுத்தம் தாக்குப்பிடிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கம்பளிப்பூச்சி போன்று ஊர்ந்து செல்லும் அளவுக்கு அதிக கால்களை கொண்டு இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை வடிவமைப்பதற்காக 100க்கும் மேற்பட்ட விலங்குகளை ஆய்வு செய்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் வகையில் இந்த மில்லிரோபோ உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

