Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உலகின் முதல் மலேரியா தடுப்பூசி திட்டம் கமரூனில் ஆரம்பம்

January 24, 2024
in News, World, முக்கிய செய்திகள்
0
உலகின் முதல் மலேரியா தடுப்பூசி திட்டம் கமரூனில் ஆரம்பம்

ஆபிரிக்க நாடான கமரூனில் மலேரியாவுக்கு எதிரான உலகின் முதலாவது தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திங்களன்று கமரூனின் தலைநகாரான யவுண்டே அருகே உள்ள சுகாதார நிலையத்தில் டேனியலா என்ற பெண் குழந்தைக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

ஆபிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 600,000 பேர் மலேரியாவால் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 80 சதவீதம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளாவர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கமரூன் அரசாங்கம், ஆறு மாதங்கள் நிறைவடைந்த அனைத்து குழந்தைகளுக்கும் RTS,S தடுப்பூசியை இலவசமாக வழங்குகிறது.

மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மொத்தம் நான்கு தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.

எனவே, தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும் முறையை பெற்றோர்களுக்கு இலகுப்படுத்தும் வகையில் மற்றைய வழக்கமான குழந்தை பருவ தடுப்பூசிகள் போடப்படும் அதே நேரத்தில் குறித்த தடுப்பூசியும் போடப்படும் என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

கென்யா, கானா மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. அங்கு தடுப்பூசி மூலம் மலேரியா உயிரிழப்புகள் 13 சதவீதம் குறைந்துள்ளது என யுனிசெப் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி குறைந்தது பாதிக்கப்பட்ட 36 சதவீதமானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அறியப்படுகிறது. அதாவது, மூன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த தடுப்பூசி சந்தேகத்திற்கு இடமின்றி உயிர் காக்கும் ஒரு நிவாரணமாக இருந்தாலும், இது ஒரு மந்திர ஆயுதம் அல்ல என கென்யாவின் மலேரியா நோய்த் தடுப்பு சபையின் வைத்திய நிபுணர் வில்லிஸ் அக்வாலே தெரிவித்துள்ளார்.

ஆனால் வைத்தியர்களுக்கு இது மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தில் நுளம்பு வலைகள் மற்றும் மலேரியா மாத்திரைகளுடன் ஒரு முக்கியமான மருந்தாகும். எனவே, இந்த மூன்றையும் ஒன்றாகப் பயன்படுத்துவது குழந்தைகளுக்கு மலேரியாவிலிருந்து 90 சதவீத பாதுகாப்பை அளிக்கும் என்று இங்கிலாந்து தலைமையிலான ஆய்வு ஒன்று மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“மலேரியா நோயாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கும் திறன் மற்றும் நோயை அகற்றுவதை துரிதப்படுத்தும் திறன் எங்களிடம் உள்ளது” என கமரூனில் தடுப்பூசி வெளியீட்டை வழிநடத்தும் வைத்தியர் ஷாலோம் என்டோலா தெரிவித்துள்ளார்.

RTS,S தடுப்பூசியின் தயாரிக்க பிரித்தானிய மருந்து தயாரிப்பாளரிப்பு நிறுவனமான ஜிஎஸ்கேவிற்கு 30 வருடங்கள் ஆகியுள்ளது.

நுளம்புகளால் பரவும் நோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் கமரூனில் தடுப்பூசி அறிமுகம் ஒரு வரலாற்று தருணம் என தடுப்பூசிக்கு அனுமதி வழங்கி உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டியுள்ளது.

இதேவேளை, இம்மாத தொடக்கத்தில் மற்றொரு முக்கிய நிகழ்வு இடம் பெற்றுள்ளது. அதாவது, 50 வருட கால வரலாற்றில் உலக சுகாதார அமைப்பால் அதிகாரப்பூர்வமாக மலேரியா நோய் இல்லாத முதல் துணை-சஹாரா ஆப்பிரிக்க நாடாக கேப் வெர்டே அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

நாரம்மலவில் லொறிச் சாரதி சுட்டுக்கொலை | சப் இன்ஸ்பெக்டரின் விளக்கமறியல் நீடிப்பு

Next Post

ஹமாசின் சிரேஸ்ட தலைவர்கள் காசாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேற இஸ்ரேல் அனுமதி? சிஎன்என் செய்தி

Next Post
ஹமாசின் சிரேஸ்ட தலைவர்கள் காசாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேற இஸ்ரேல் அனுமதி? சிஎன்என் செய்தி

ஹமாசின் சிரேஸ்ட தலைவர்கள் காசாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேற இஸ்ரேல் அனுமதி? சிஎன்என் செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures