Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

உலகளவில் முணுமுணுக்கும் பாடல் ! இலங்கையை திரும்பிப்பார்க்க வைத்த இளம் குரல்

August 23, 2021
in Cinema, News
0
உலகளவில் முணுமுணுக்கும் பாடல் ! இலங்கையை திரும்பிப்பார்க்க வைத்த இளம் குரல்

‘இரவில் ஒன்றே ஒன்று’ மெனிகே மஹே ஹிதே (Manike Mage Hithe) என்ற பாடலின் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் யொகானி.இவர் சிங்கள மொழி பாடகியாவர். 1993 ஜூலை 30 கொழும்பில் பிறந்த இவர் பாடகர், பாடலாசிரியர், ராப் பாடகர், இசையமைப்பாளரும் ஆவர்.

கொழும்பில் பிறந்து வளர்ந்த யொஹானி. யூடியூபராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார்.

பல பாடல்களைப் பாடிய இவர் இப்போது உலகம் முழுவதும் தன்னுடைய ஒரு பாடல் மூலம் பிரபலமாகி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

‘இரவில் ஒன்றே ஒன்று’ (Manike Mage Hithe) இந்த பாடல் இப்போது நாடுகள் மொழிகள் கடந்து பலராலும் ரசிக்க படுகின்ற பாராட்ட படுகின்ற பாடலாக மாறியுள்ளது.

இந்த பாடலுக்கான வரிகளை துலன் எஆர் எக்ஸ்  (துலஞ்சா அல்விஸ்) என்பவர்  எழுதியுள்ளதோடு, சாமத் சங்கீத் இசை அமைத்துள்ளார். இந்த பாடலை யொஹானியுடன் சதீஸ்சான் பாடியுள்ளார்.

யூடியூபில் இந்த பாடல் வெளியாகி 3 மாதங்களில் 50 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இந்த பாடல் வெளியாகி பின்னர் அவருடைய யூடியூப் சேனலை 12 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளார்கள்.

இந்த பாடலை பொலிவூட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அசந்து வியந்து ரசித்து பாராட்டியுள்ளார்.

இலட்சக்கணக்கான இந்திய ரசிகர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த பாடல் தமிழிலும், மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இரவில் ஒன்றே ஒன்று… மனதில்  சென்றதென தேடி…. உனை தேடி…
பறக்கும் பறவை ஒன்று… விரியும் அழகை இன்று போலி… நீ என் தேவி…
நீ… இந்த இரவில் பறந்ததோ… நிஜம் மறந்து சிரிப்பதோ…. சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ………

இந்த பாடலை தமிழில் யொஹானி மற்றும் அனஸ் ஷாஜஹான் பாடியுள்ளார்கள். சாமத் சங்கீத் இசையமைத்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாள பாடல் வரிகள் அனாஸ் ஷாஜஹான் மற்றும் என்எஸ்டி ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது.

“ எமக்கு வழங்கியுள்ள ஆதரவுக்கு மிக்க நன்றி . எனவே இந்த பாடலை ரசிக்குமாறு நான் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். இது தனியாக முன்னெடுக்கப்படும் பயணமல்ல . அனைவருக்கும் நன்றி “ என யொஹானி தெரிவித்துள்ளார்.

‘இரவில் ஒன்றே ஒன்று’ (Manike Mage Hithe) பாடல் ; <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/mfSWsH3ha70?start=24″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

Previous Post

கிருஷ்ணன் அளித்த கலியுக விளக்கம்

Next Post

பொருளாதார நெருக்கடிக்கு நாட்டை முடக்கியமை காரணமல்ல – திஸ்ஸ அத்தநாயக்க

Next Post
பொருளாதார நெருக்கடிக்கு நாட்டை முடக்கியமை காரணமல்ல – திஸ்ஸ அத்தநாயக்க

பொருளாதார நெருக்கடிக்கு நாட்டை முடக்கியமை காரணமல்ல – திஸ்ஸ அத்தநாயக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures