உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘விக்ரம்’ படத்தின் ஓடியோ மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘விக்ரம்’.
இதில் ‘உலகநாயகன்’ கமலஹாசன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
இவருடன் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பகத் பாசில், ஷிவானி நாராயணன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனின் ஜோடியாக கன்னட நடிகை ஷான்வி ஸ்ரீவத்ஸா நடித்திருக்கிறார்.
கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜட்டில் உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, ஜூன் 3ஆம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஓடியோ மற்றும் முன்னோட்டம் மே மாதம் 15ஆம் திகதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ‘விக்ரம்’ வெளியாவதால் ரசிகர்களிடையே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
லோகேஷ் கனகராஜ்- அனிருத் என்ற இளம் திறமையான வெற்றி பெற்ற கலைஞர்களுடன் ‘உலகநாயகன்’ கமலஹாசன் கூட்டணி அமைத்திருப்பதாலும், நடிகர் கமலஹாசன் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ‘விக்ரம்’ வெளியாக இருப்பதாலும் திரைப்பட ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]