Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உலகக் கிண்ண அரை இறுதி வரை முன்னேறுவதே இலக்கு | சமரி அத்தபத்து

April 26, 2024
in News, Sports, முக்கிய செய்திகள்
0
உலகக் கிண்ண அரை இறுதி வரை முன்னேறுவதே இலக்கு | சமரி அத்தபத்து

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வு பெறுவதற்கு முன்னர் உலகக் கிண்ண அரை இறுதி வரை இலங்கை அணியை முன்னேற்றச் செய்வதே தனது இலக்கு என இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து கூறுகிறார்.

பங்களாதேஷில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னோடியாக அபுதாபியில் தகுதிகாண் சுற்று இன்று வியாழக்கிழமை (25) ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று மாலை நடைபெற்ற சூம் இணையவழி ஊடக சந்திப்பின்போது சமரி அத்தபத்து இதனைத் தெரிவித்தார். 

‘எனது தேசிய கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பமானது முதல் இன்று வரை எனது எதிர்பார்ப்புகளை, இலக்குகளை நிறைவேற்றியுள்ளேன். இப்போது எனது இலக்கு அபுதாபியில் இன்று ஆரம்பமாகவுள்ள தகுதிகாண் சுற்றில் வெற்றிபெற்று உலகக் கிண்ண பிரதான சுற்றுக்கு இலங்கையைக் கொண்டுசெல்வதாகும். அங்கு உலகக் கிண்ண இறுதிவரை முன்னேறுவதே எனது இலக்காகும். அரை இறுதியை அடைந்துவிட்டால் எமது அணி பொறுப்புணர்வுடன் விளையாடி உலகக் கிண்ணத்தையும் சுவிகரிக்கக்கூடியதாக இருக்கும்’ என சமரி அத்தபத்து மேலும் கூறினார்.

போதிய அனுபவம் கிடைக்கும் 

மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னர் தகுதிகாண் சுற்றின் மூலம் வீராங்கனைகளுக்கு போதிய அனுபவம் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

‘துரதிர்ஷ்டவசமாக மகளிர் ரி20 அணிகளுக்கான  தரவரிசையில் எமக்கு பின்னடைவு ஏற்பட்டதாலும் பங்களாதேஷ் வரவேற்பு நாடாக நேரடி தகுதிபெற்றதாலும் எமது அணி தகுதிகாண் சுற்றில் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டது. அது ஒருவகையில் எமது அணிக்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனேனில் தகுதிகாண் சுற்றில் விளையாடுவதன் மூலம் உலகக் கிண்ண பிரதான சுற்றுக்கு முன்னர் வீராங்கனைகளுக்கு போதிய அனுபவத்தைப் பெறக்கூடியதாக இருக்கும். அத்துடன் சில வீராங்கனைகளைப் பரீட்சிக்கவும் எண்ணியுள்ளோம். இலங்கையில் அண்மையில் நடைபெற்ற அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட இருவகை மட்டுப்படுத்தப்படட ஓவர் மும்முனை கிரிக்கெட் தொடரில் அற்புதமாக பந்து வீசி விக்கெட்களைக் கைப்பற்றிய ஷஷினி கிம்ஹானி அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். அது வரவேற்கத்தக்கது. வித்தியாசமான பந்துவீச்சுப் பாணியைக் கொண்ட 15 வயதுடைய அவருக்கு சர்வதேச கிரிக்கெட் அனுபவம் தேவை. இந்தத் தொடரில் அதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என நம்புகிறேன்’ எனவும் சமரி குறிப்பிட்டார்.

இலங்கையின் வாய்ப்பு

ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் இலங்கையின் வாய்ப்பு குறித்து கேட்டதற்கு பதிலளித்த சமரி அத்தபத்து,

‘தகுதிகாண் சுற்றில் விளையாடும் ஒவ்வொரு அணியும் வெற்றிபெறுவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளன. எனவே எந்தவொரு அணியையும் நாங்கள் குறைத்து மதிப்பிடப்போவதில்லை. நாங்கள் எமது அதிகபட்ச திறமையை வெளிப்படுத்துவோம். ஒவ்வொரு போட்டியையும் சிறந்த திட்டமிடல்கள், வியூகங்களுடன் எதிர்கொள்வோம். உலகக் கிண்ண தகுதியை இலங்கையினால் பெற முடியும் என முழுமையாக நம்புகிறேன்’ என்றார்.

மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை இன்று (25) தனது முதலாவது போட்டியில் தாய்லாந்தை டொலரன்ஸ் ஓவல் விளையாட்டரங்கில் பிற்பகல் எதிர்த்தாடவுள்ளது.

தொடர்ந்து ஸ்கொட்லாந்தை எதிர்வரும் சனிக்கிழமையும் உகண்டாவை எதிர்வரும் மே 1ஆம் திகதியும் இலங்கை எதிர்த்தாடும். இந்த இரண்டு போட்டிகளும் அபுதாபி விளையாட்டரங்கில் நடைபெறும்.

ஐக்கிய அமெரிக்காவுடனான இலங்கையின் கடைசிப் போட்டி டொலரன்ஸ் ஓவல் விளையாட்ரங்கில் மே 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பி குழுவில் அயர்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், வனாட்டு, ஸிம்பாப்வே ஆகிய அணிகள் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

ஏ மற்றும் பி குழுக்களில் லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாடும்.

அரை இறுதிகளில் வெற்றிபெறும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடுவதுடன் மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலும் விளையாட தகுதிபெறும்.

இலங்கை குழாம்

இலங்கை குழாத்தில் சமரி அத்தபத்து (தலைவி), கவிஷி டில்ஹாரி ஆகிய இருவரும் சகலதுறை வீராங்கனைகளாகவும் விஷ்மி குணரட்ன, ஹன்சிமா கருணாரட்ன, ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹாசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி, நிலக்ஷிகா டி சில்வா ஆகியோர் துடுப்பாட்ட வீராங்கனைகளாகவும் இரோஷி ப்ரியதர்ஷனி, அச்சினி குலசூரிய, சுகந்திகா குமாரி, உதேஷிகா ப்ரபோதனி, இனோக்கா ரணவீர, ஷ ஷினி கிம்ஹானி, காவியா காவிந்தி ஆகியோர் பந்துவீச்சாளர்களாகவும் இடம்பெறுகின்றனர்.

Previous Post

‘கில்லி’ ரீ-ரிலீஸ் மாபெரும் வெற்றி: விஜய்க்கு விநியோகஸ்தர் வாழ்த்து..!

Next Post

யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது

Next Post
கொட்டாவையில் 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்தவர் கைது

யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures