Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உலகக்கிண்ண இறுதிப்போட்டி: 52 இலட்சம் ரூபா வரையான விலையில் கறுப்புச் சந்தையில் ரிக்கெட் விற்பனை | பிரான்ஸ் வீரர்கள் சிலருக்கு சுகவீனங்கள்

December 19, 2022
in News, Sports, முக்கிய செய்திகள்
0
உலகக்கிண்ண இறுதிப்போட்டி: 52 இலட்சம் ரூபா வரையான விலையில் கறுப்புச் சந்தையில் ரிக்கெட் விற்பனை | பிரான்ஸ் வீரர்கள் சிலருக்கு சுகவீனங்கள்

உலககக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் பிரான்ஸ் அணி வீரர்கள் சிலருக்கு சுகவீனங்கள் ஏற்பட்டுள்ளன. அதேவேளைஇ கறுப்புச் சந்தையில் 52 லட்சம் இலங்கை ரூபா (12 லட்சம் இந்திய ரூபா) வரையான விலையில் டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன.

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்­பந்­தாட்­டத்தின் இறுதிப் போட்­டியில் நடப்புச் சம்­பியன் பிரான்ஸும் முன்னாள் சம்­பியன் ஆர்­ஜென்­டீ­னாவும் இன்று மோது­கின்­றன. கத்­தாரின் தலை­நகர் தோஹா­வி­லி­ருந்து 23 கிலோ­மீற்றர் தூரத்­தி­லுள்ள, அந்­நாட்டின் 2 ஆவது மிகப் பெரிய நக­ரான லூசெய்லின், லூசெய்ல் அரங்கில் உள்ளூர் நேரப்­படி இன்று மாலை 6.00 மணிக்கு (இலங்கை நேரப்­படி இரவு 8.30 மணிக்கு இப்­போட்டி ஆரம்­ப­மாகும்.

பீபா­வினால் 22 தட­வை­யாக நடத்­தப்­படும் உலகக் கிண்ண சுற்­றுப்­போட்டி இது. இந்­நி­லையில், ஆர்­ஜென்­டீனா, பிரான்ஸ் ஆகிய இரு அணி­களும் 3 தட­வை­யாக உல­கக் கிண்­ணத்தை வெல்ல முயற்­சிக்­கின்­­றன.

ஆர்­ஜென்­டீனா 1978 மற்றும் 1986 ஆம் ஆண்­டு­களில் உலக சம்­பி­ய­னா­கி­யது. 1930, 1990, 2014 ஆம் ஆண்­டு­களின் இறு­திப்­போட்­டி­களில் ஆர்­ஜென்­டீனா தோல்­வி­யுற்­றது.

பிரான்ஸ் 1998, 2018 ஆம் ஆண்­டு­களில் உலக சம்­பி­ய­னா­கி­யது. 2006 ஆம் ஆண்டு இறு­திப்­போட்­டியில் பிரான்ஸ் தோல்­வி­யுற்­றி­ருந்­தது.
இச்­சுற்­றுப்­போட்­டியில் சம்­பி­ய­னாகும் அணிக்கு வெற்­றிக்­கிண்­ணத்­துடன் 42 மில்­லியன் டொலர்கள் (சுமார் 1,558 கோடி இலங்கை ரூபா) பணப்­ப­ரிசு வழங்­கப்­படும். 2 ஆம் இடம் பெறும் அணிக்கு 30 மில்­லியன் டொலர்கள் (1,113 இலங்கை கோடி ரூபா) வழங்­கப்­படும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

நேருக்கு நேர்

ஆர்­ஜென்­டீ­னாவும் பிரான்ஸும் 1930 முதல் இது­வரை 12 தட­வைக‍ேள சர்­வ­தேச போட்­டி­களில் ஒன்­றை­யொன்று எதிர்த்­தா­டி­யுள்­ளன. இவற்றில் ஆர்­ஜென்­டீனா 6 தட­வை­களும் பிரான்ஸ் 3 தட­வை­களும் வென்­றுள்­ளன.

உல­கக்­ கிண்­ண வரலாற்றில் 3 தட­வைகள் இவ்வணிகள் மோதி­யதில் 2 தட­வைகள் ஆர்­ஜென்­டீ­னாவும், ஒரு தடவை பிரான்ஸும் வென்­றன.

எனினும், இவ்­விரு அணி­களும் இறு­தி­யாக 2018 உலகக்கிண்ண கால்­பந்­தாட்­டத்தின் 2 ஆவது சுற்றில் மோதின. அப்­போட்­டியில் 4:3 கோல் விகி­தத்தில் பிரான்ஸ் வென்றது.

1958, 1962 ஆம் ஆண்­டு­களில் தொடர்ச்­சி­யாக 2 தட­வைகள் உலகக் கிண்­ணத்தை வென்ற பின்னர் இது­வரை எந்த நடப்புச் சம்­பி­யனும் கிண்­ணத்தை தக்­க­வைத்துக் கொள்­ள­வில்லை.

1990 இல் அப்­போ­தைய நடப்புச் சம்­பியன் ஆர்­ஜென்­டீ­னாவும் 1998 இல் நடப்புச் சம்பியன் பிரே­ஸிலும் இறுதிப் போட்­டியில் தோல்­வி­யுற்­றன.

கால்­பந்­தாட்­டத்­து­றையில் பெரும் சாத­னை­களைப் படைத்த, ஆர்­ஜென்­டீன அணித்­த­லைவர் லயனல் மெஸி இது­வரை உலகக் கிண்­ணத்தை வெல்­ல­வில்லை. 2014 ஆம் ஆண்டின் இறு­திப்­போட்­டியில் மெஸி தலை­மை­யி­லான ஆர்­ஜென்­டீனா, ஜேர்­ம­னி­யிடம் தோல்­வி­யுற்­றி­ருந்­தது.

இது தனது கடைசி உல­கக்­கிண்ணப் போட்டி என லியோ மெஸி அறி­வித்­துள்ள நிலையில், உலக சம்­பி­ய­னாக, உலகக் கிண்­ணத்­தி­லி­ருந்து விடை­பெற மெஸியும் அவரின் ரசி­கர்­களும் விரும்­பு­கின்­றனர்.
35 வய­தான மெஸி இச்­சுற்­றுப்­போட்­டியில் 5 கோல்­களைப் புகுத்தி, இது­வரை அதிக கோல்­களைப் புகுத்­திய 2 வீரர்­களில் ஒரு­வ­ராகத் திகழ்­கிறார்.

மறு­புறம் நடப்புச் சம்­பியன் பிரான்ஸும் மிகப் பலம் வாய்ந்த அணி­யாக திகழ்­கி­றது.

அவ்­வ­ணியின் தலைவர் ஹியூகோ லோறிஸ் எதிர்­வரும் 26 ஆம் திகதி தனது 36 ஆவது பிறந்த தினத்தைக் கொண்­டா­டு­கிறார். இம்­முறை பிரான்ஸ் சம்­பி­ய­னானால் 2 தட­வைகள் பீபா உலகக் கிண்­ணத்தை வென்ற முதல் அணித்­த­லை­வ­ராக ஹியூகோ லோறிஸ் சாதனை படைப்பார். பிரெஞ்சு அணியின் கோல் காப்­பாளர் அவர்.

தங்கப் பாத­ணியை நோக்கி…

பிரான்ஸின் கோல் மெஷி­னாக கரு­தப்­ப­டுவர் கிலியன் எம்­பாப்பே, நாளை மறு­தினம் (20) தனது 24 ஆவது பிறந்த தினத்தைக் கொண்­டா­ட­வுள்ள எம்­பாப்பே, இந்த உலகக் கிண்­ணத்தில் 5 கோல்­களைப் புகுத்­தி­யுள்ளார். இச்­சுற்­றுப்­போட்­டியில் இது­வரை அதிக கோல்­களைப் புகுத்­தி­ய­வர்­களில் மெஸி­யுடன் முதல் இடத்தை பகிர்ந்து­கொண்­டுள்ளார்.

இச்­சுற்­றுப்­போட்­டியில் அதிக கோல்­களைப் புகுத்­தி­யர்­களில் 2 ஆம் இடத்தில் உள்­ள­வர்கள் ஆர்­ஜென்­டி­னாவின் ஜூலியன் அல்­வா­ரெஸும் பிரான்ஸின் ஒலிவர் கிரூட்டும். இவர்கள் தலா 4 கோல்­களைப் புகுத்­தி­யுள்­ளனர். இச்­சுற்­றுப்­போட்­டியில் அதிக கோல்­களை புகுத்­திய பட்­டி­ய­லி­லுள்ள முதல் 4 வீரர்­களும் இறு­திப்­போட்­டியில் விளை­யாட வாய்ப்­புள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்­நால்­வரின் ஒருவர் தங்­கப்­பா­தணி விருதை வெல்ல அதிக வாய்ப்­புள்­ளது.

மத்­தி­யஸ்தர்

இறுதிப் போட்­டியின் மத்­தி­யஸ்­த­ராக போலந்தைச் சேர்ந்த சிமோன் மர்­சி­னியாக் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.
முதல் சுற்றில் பிரான்ஸ் வெற்­றி­பெற்ற டென்­மார்­க்குக்கு எதி­ரான போட்டி, 2 ஆவது சுற்றில் ஆர்­ஜென்­டீனா வென்ற அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான போட்டி ஆகி­ய­வற்­றிலும் மத்­தி­யஸ்­தராக, 41 வய­தான மர்­சியாக் பணி­யாற்­றி­யி­ருந்தார்.
அவரின் சக நாட்­ட­வர்­க­ளான பவெல் சோகோல்­னிக்கி, தோமஸ் லிஸ்­தி­கீவிக்ஸ் ஆகியோர் உதவி மத்­தி­யஸ்­தர்­க­ளாக பணி­யாற்­ற­வுள்­ளனர்.

52 இலட்சம் ரூபா ரிக்கெட்

இறு­திப்­போட்­டியை பார்­வை­யிட விரும்பும் ஆர்­ஜென்­டீன ரசி­கர்­க­ளில் பெரும் எண்­ணிக்­கை­யா­னோர் ரிக்கெட் கிடைக்­கா­ததால் அதி­ருப்­தி­யுற்­றுள்­ளனர். ரிக்கெட் பெற உத­வு­மாறு

ஆர்­ஜென்­டீன கால்­பந்­தாட்டச் சம்­மே­ள­னத்தை வலி­யு­றுத்­து­வ­தற்­காக, தோஹாவில் ஆர்­ஜென்­டீன குழாத்­தினர் தங்­கி­யுள்ள ஹோட்­ட­லுக்கு வெளியே 2 நாட்­க­ளாக ஆர்­ஜென்­டீன ரசி­கர்கள் ஆர்ப்­பாட்­டத்­திலும் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

இறு­திப்­போட்­டிக்­கு­ரிய மலி­வான ரிக்­கெட்­க­ளுக்கு பீபா 750 டொலர்கள் (278,000 இலங்கை ரூபா) விலை நிர்­ண­யித்­துள்­ளது. ஆனால் அவை 4,000 டொலர்­க­ளுக்கு (சுமார் 15 லட்சம் இலங்கை ரூபா) கறுப்புச் சந்­தையில் விற்­பனை செய்­யப்­ப­டு­வ­தாக ரசி­கர்கள் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.

மிக அதிக விலை­யுள்ள 5,850 டொலர்கள் (சுமார் 21 லட்சம் ரூபா) பெறு­ம­தி­யான ரிக்­கெட்கள், கறுப்புச் சந்­தையில் 14,000 டொலர்­க­ளுக்கு (சுமார் 5,200,000 லட்சம் இலங்கை ரூபா, 12 லட்சம் இந்திய ரூபா) விற்­கப்­ப­டு­வ­தாக ரசி­கர்கள் கூறு­கின்­றனர்.

லூசெய்ல் அரங்கில் 88,900 பேருக்­கான இட­வ­சதி உள்­ளது. தற்போது 30 ஆயி­ரத்­துக்கு அதி­க­மான ஆர்­ஜென்­டீ­னி­யர்கள் கத்­தாரில் உள்­ளனர் எனவும், பலர் கடன் வாங்கிக் கொண்டு, கத்­தா­ருக்கு வந்­துள்­ள­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

ஆரோக்­கியப் பாதிப்­புகள்

பிரான்ஸின் சில வீரர்­க­ளுக்கு மர்ம வைரஸ் பாதிப் ­பொன்று ஏற்­பட்­டுள்­ள­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.
நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற பிரெஞ்சு குழாம் பயிற்­சியில் ரபாயெல் வ­ரேன், இப்­ரா­ஹிமா கொனாட்டே, கிங்ஸ்லி கோமன் ஆகிய மூவரும் பங்­கு­பற்­ற­வில்லை.

இவ்­வீ­ரர்­க­ளுக்கு தடிமன் போன்ற அறி­கு­றிகள் தென்­பட்­ட­மையே இதற்குக் காரணம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
ஏற்­கெ­னவே, மொரோக்­கோ­வு­ட­னான அரை இறுதி அட்­ரியென் ரபி­யொட், டெயோட் உபா­மெ­கானோ ஆகியோர் விலகி­யிருந்த­னர். எனினும் இவ்விருவரும் பின்னர் பயிற்சிகளுக்குத் திரும்பியமை குறிப்­பிடத்­­ தக்கது.

ஆர்ஜென்டீன அணித்­தலைவர் மெஸியும் நேற்று­முன்தினம் பயிற்சியில் பங்குபற்றவில்லை. அவரின் கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என செய்தி வெளி­யாகி­யிருந்தது. எனினும், மெஸிக்கு பாதிப்பு இல்லை எனவும் அவர் இறுதிப் போட்டியில் விளை­யாடுவார் எனவும் ஆர்ஜென்டீன ஊடகமான கிளேரின் தெரி­வித்துள்ளது.

Previous Post

தமிழினம் அழிவிலிருந்து தப்ப வேண்டுமெனில் தமிழர் தாயகம் மீதான நில ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் | வேந்தர் பேராசிரியர் சி. பத்மநாதன்

Next Post

3 ஆவது உலக சம்பியன் பட்டத்தை குறிவைத்து ஆர்ஜன்டீனாவும் பிரான்ஸும் இன்று மோதல்

Next Post
3 ஆவது உலக சம்பியன் பட்டத்தை குறிவைத்து ஆர்ஜன்டீனாவும் பிரான்ஸும் இன்று மோதல்

3 ஆவது உலக சம்பியன் பட்டத்தை குறிவைத்து ஆர்ஜன்டீனாவும் பிரான்ஸும் இன்று மோதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures