ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று இடம்பெறுகிற நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் காலை வேளையில் மிகுந்த உற்சாகத்துடன் பரீட்சை மண்டபத்துக்கு சென்றிருந்தார்கள் தமது பிள்ளைகளை பெற்றோர்கள் பரீட்சை நிலையத்திற்கு உற்சாகமளித்து அனுப்பி வைத்ததையும் காணக் கூடியதாக இருந்தது
ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று இடம்பெறும் நிலையில் நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 34 ஆயிரத்து 698 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். பரீட்சைக்காக 2 ஆயிரத்து 894 பரீட்சை மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்முறை பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது என்பதுடன் இதற்கு பதிலாக பரீட்சை ஆரம்பமாவதற்கு முன்னர் வருகை பதிவு ஆவணமொன்றில் கையெழுத்து பெறப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்தது.
இம்முறை பரீட்சையில் பகுதி இரண்டுக்கான வினாத்தாள் முதலில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.