எம்மில் பலரும் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, தங்களின் மன ஆரோக்கியத்தை இழந்து வருகிறார்கள்.
இந்நிலையில் உறக்கத்தில் மட்டுமே உண்டாகும் பிரச்சனைகளை குறித்து மருத்துவர்கள் விளக்கமளிக்கிறார்கள்.
காலை முதல் இரவு உறங்குவதற்கு முன்பு வரை எம்மில் பலருக்கும் பலவகையான உடலியக்க கோளாறுகள் ஏற்படுவது இயல்பு.
அதற்கான அறிகுறிகளை கண்டறிந்து, மருத்துவரை சந்தித்து சிகிச்சையும் பெறுகிறோம். ஆனால் உறக்கத்தில் மட்டுமே ஏற்படும் பிரச்சினைகளை பெரும்பாலும் எம்மால் உடனடியாக உணர்ந்து கொள்ள முடிவதில்லை.
இத்தகைய பிரச்சனைகளை மற்றவர்கள் எடுத்துரைக்கும் போது தான் நாம் அதுகுறித்து சிந்திக்கிறோம்.
பொதுவாக உறக்கத்தின் போது பலரும் கனவு காண்கிறார்கள்.
கனவு காண்பது தொல்லை இல்லை என்றாலும், சிலர் கனவு கண்டு கொண்டிருக்கும் போது திடீரென்று எழுந்து உட்கார்ந்து சுற்றும் முற்றும் அசாதாரணமான முறையில் பார்வையிடுவார்கள்.
வேறு சிலர் உறக்கத்தின் போது மட்டுமே பற்களை ‘நறநற’ வென அழுந்த கடிப்பார்கள். இதனால் அவர்களது தாடைப் பகுதியில் பாதிப்பு ஏற்படும்.
வேறு சிலர் உறக்கத்தின் போது பேசுவார்கள். சிலர் தவறான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள்.
சிலர் உறக்கத்தின் போது படுக்கையிலிருந்து எழுந்து சிறிது தூரம் நடந்து சென்று மீண்டும் திரும்பி வந்து படுக்கையில் உறங்குவார். மேலும் வேறு சிலருக்கு உறக்கத்தின் போது நடத்தை மாற்றம் என்ற உளவியல் கோளாறுகளும் ஏற்படும்.
உறக்கத்தின் போது மட்டுமே ஏற்படும் இத்தகைய பிரச்சனைகளை உடனடியாக தெரிந்துகொண்டு, கால தாமதம் ஏதும் செய்யாமல் நரம்பியல் நிபுணர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.
டொக்டர் ராமகிருஷ்ணன்
தொகுப்பு அனுஷா
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]