ஆஸ்திரேலியாவில் கடும் வெயில் காரணமாக தார்சாலைகள் உருகி வாகனங்களில் ஒட்டிக் கொள்வதால் வாகனங்கள் சேதம் அடைகின்றனகடந்த ஒரு வாரமாக ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து பகுதியில் வெயில் மிகவும் அதிகரித்துள்ளது. அனல் காற்றி வீசுகிறது. மக்களால் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடுமையான வெயில் காரணமாக சாலைகளில் உள்ள தார் உருகி ஓடுகிறது. சாலையில் செல்லும் வாகனங்களின் சக்கரங்களிலும் சில வேளைகளில் வாகனங்களிலும் ஒட்டிக் கொள்கின்றன. இதனால் பல வாகனங்கள் பாழாகி உள்ளது.
இது குறித்து அந்த நகர மேயர், “எனது வாழ்க்கையில் நான் இது போல வெயிலைக் கண்டதில்லை. நேற்று முதல் மதிய வேளைகளில் சாலைகளில் செல்ல தடை விதித்துள்ளோம். கடுமையான வெயில் காரணமாக காரின் முன்பக்க விண்ட்ஸ்கிரீன் உடைந்துள்ளதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்” என கூறி உள்ளார்.

