பாராளுமன்றம் இன்று கேலிக் கூத்தாக மாறியுள்ளதாகவும், சட்ட ரீதியான முறையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்தால் இதனைக் கைவிட்டுவிட்டுப் போவதற்கு தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கஸாகல புராதன விகாரையில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
கத்தியுடன் பாராளுமன்றத்தில் செயற்பட்டவர்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் இருந்ததனாலேயே எமது தரப்பிலிருந்த இளைஞர்கள் கொதித்து எழுந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

